பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு பா.ம.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்


பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு பா.ம.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 Oct 2018 10:15 PM GMT (Updated: 5 Oct 2018 5:05 PM GMT)

பெட்ரோல் , டீசல் விலை உயர்வை ரத்து செய்யக்கோரி பா.ம.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர்,

பெட்ரோல், டீசல் விலை உயர்வை ரத்து செய்யக்கோரி நேற்று திருவள்ளூரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகே திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சி மாநில துணை அமைப்பு செயலாளர் நா.வெங்கடேசன் தலைமை தாங்கினார். மாநில இளைஞரணி துணை செயலாளர் தினேஷ்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் விடையூர் கேசவன், மாவட்ட துணை செயலாளர்கள் வாசுதேவன், குமார், சுரேஷ், விஜயராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் டாக்டர் பாலா என்கிற பாலயோகி கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். 300-க்கும் மேற்பட்ட பா.ம.க. நிர்வாகிகள் கலந்துகொண்டு பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும் அதனை குறைக்கக்கோரியும் கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். முடிவில் திருவள்ளூர் நகர செயலாளர் கண்ணன் நன்றி கூறினார்.

கும்மிடிப்பூண்டி தபால் நிலையம் முன்பு பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் மாநில துணை பொதுச்செயலாளர் செல்வராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட செயலாளர் குபேந்திரன், மாநில இளைஞர் அணி துணை பொதுச்செயலாளர் சங்கர், மாவட்ட இளைஞர் அணி நிர்வாகி ஏகாம்பரம், நகரத்தலைவர் வினோத்குமார், நிர்வாகிகள் சுண்ணாம்பு குளம் ரவி, விஜயகுமார், ஜெகதீசன், எஸ்.டி.கே.சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பா.ம.க.வினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பள்ளிப்பட்டு தாலுகா அலுவலகம் முன்பு பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ம.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கட்சி நிர்வாகி குப்புசாமி தலைமை தாங்கினார். ஒன்றிய நிர்வாகிகள் லோகன், சுப்பிரமணி, புருஷோத்தமன், சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட நிர்வாகிகள் மாணிக்கம், விஜயன், ஏழுமலை, பாரதி, உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் இது தொடர்பான புகார் மனு தாசில்தாரிடம் வழங்கப்பட்டது.

காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட பா.ம.க. சார்பில் மதுராந்தகம் தேரடி தெருவில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணை பொதுச்செயலாளர் பொன்.கங்காதரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஆத்தூர் கோபாலகண்ணன் வரவேற்புரையாற்றினார். மாநில உழவர் பேரியக்க செயலாளர் சாந்தமூர்த்தி , மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வீ.கு.சபரி, முன்னாள் மாவட்ட தலைவர் குணசேகரன், முன்னாள் மாவட்ட அமைப்பு செயலாளர் சரவணன், மதுராந்தகம் தொகுதி செயலாளர் பக்கிரிசாமி, வன்னியர் சங்க முன்னாள் தலைவர் சகாதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மாவட்ட தொண்டர் அணி செயலாளர் சந்தோஷ் , வன்னியர் சங்க மாவட்ட தலைவர் கணபதி , மாவட்ட துணைச்செயலாளர் நடராஜ், முன்னாள் நகர செயலாளர் ராஜா, மாநில மாணவர் அணி துணைச்செயலாளர் அய்யப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் சாய்மகேஷ், நகர தலைவர் ரவி ஆகியோர் நன்றி கூறினார்.

Next Story