மக்கள் சேவை இயக்க விவசாய பிரிவு தலைவர் நூதன போராட்டம்


மக்கள் சேவை இயக்க விவசாய பிரிவு தலைவர் நூதன போராட்டம்
x
தினத்தந்தி 6 Oct 2018 4:00 AM IST (Updated: 6 Oct 2018 12:26 AM IST)
t-max-icont-min-icon

வேப்பூர் ஒன்றிய செயலாளர், மக்கள் சேவை இயக்க விவசாய பிரிவு தலைவர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.

பெரம்பலூர்,

அகில இந்திய மக்கள் சேவை இயக்கத்தின் விவசாய பிரிவு மாநில தலைவர் தங்க சண்முகசுந்தரம், அந்த இயக்கத்தின் வேப்பூர் ஒன்றிய செயலாளர் மாற்றுத்திறனாளியான மதியழகன் என்பவரை அழைத்து கொண்டு பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார்.

அப்போது மத்திய அரசு தமிழகத்தில் செயல்படுத்தவுள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு உடனடியாக தமிழக முதல்-அமைச்சர் தடை விதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

மத்திய அரசு தமிழகத்தில் இது போன்ற திட்டங்களை கொண்டு வருவதால் விவசாயிகள் கழுத்தில் தூக்கு கயிறு போட்டு இழுப்பது போல் இருப்பதாக கூறி, மாற்றுத்திறனாளி மதியழகனை விவசாயியாகவும், அவர் கழுத்தில் தூக்கு கயிற்றை போட்டு மத்திய அரசு இழுத்து வருவதாக தங்க சண்முகசுந்தரம் நடித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் போராட்டத்தை தடுத்து நிறுத்தினர். பின்னர் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த தடைவிதிக்க தமிழக முதல்-அமைச்சரை வலியுறுத்தி தங்க சண்முகசுந்தரம் பெரம்பலூர் கலெக்டர் சாந்தாவிடம் மனு அளித்து விட்டு சென்றார்.

Next Story