பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 Oct 2018 4:00 AM IST (Updated: 6 Oct 2018 12:31 AM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெரம்பலூர்,

பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்தும், அதன் விலையை குறைக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பெரம்பலூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நேற்று பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு பா.ம.க. பெரம்பலூர் மாவட்ட செயலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், அதன் விலையை குறைக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதில் பா.ம.க. மாநில துணை தலைவர்கள் அனுக்கூர் ராஜேந்திரன், கண்ணபிரான், மதுரா செல்வராஜ், பெரம்பலூர் மாவட்ட தலைவர் மருதவேல், நகர செயலாளர் வெங்கடேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து அரியலூர் அண்ணாசிலை அருகே பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வன்னியர் சங்க மாநில துணை பொதுச் செயலாளர் வைத்தி தலைமை வகித்து ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். பா.ம.க. அரியலூர் மாவட்ட செயலாளர் கண்ணன் முன்னிலை வகித்தார். பா.ம.க. மாநில துணைத்தலைவர் சின்னதுரை வரவேற்று பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். மேலும் அவர்கள் பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வந்து, அதன் விலையை குறைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். முடிவில் நகர செயலாளர் விஜி நன்றி கூறினார்.

Next Story