நெல் கொள்முதல் செய்யாததை கண்டித்து முளைத்த நெல்லை சாலையில் கொட்டி விவசாயிகள் மறியல்
நெல் கொள்முதல் செய்யாததை கண்டித்து முளைத்த நெல்லை சாலையில் கொட்டி தஞ்சை அருகே விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 3 இடங்களில் இந்த சாலை மறியல் போராட்டம் நடந்தது.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டத்தில் தற்போது குறுவை அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் குறுவை அறுவடை செய்த நெல்லை கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யவில்லை. தஞ்சையை அடுத்த வாண்டையார் இருப்பு பகுதியில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்திலும் நெல் கொள்முதல் செய்யவில்லை.
இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் 100-க்கும் மேற்பட்டவர்கள் காமராஜ் தலைமையில் ஒன்று திரண்டு கொள்முதல் நிலையத்தை திறந்து நெல்லை கொள்முதல் செய்யக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதே போல் தஞ்சையை அடுத்த சின்னப்புலிக்குடிக்காடு நேரடி நெல் கொள்முதல் நிலையம் முன்பு விவசாயி ராஜகோபால் தலைமையில் 60-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் நடத்தி சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் அரசு நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து உடனே கொள்முதல் செய்ய வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.
இதே போல் தஞ்சை-பட்டுக்கோட்டை சாலையில் மடிகை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மழையால் நனைந்து முளைத்து போன நெல்லை அள்ளி வந்து சாலையில் கொட்டி விவசாயி முருகானந்தம் தலைமையில் மறியல் போராட்டம் நடத்தினர். இது குறித்து தகவல் அறிந்ததும் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சமாதானம் செய்தனர். இதன்பின்னர் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தஞ்சை பட்டுக்கோட்டை சாலை மடிகையில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் குறுவை நெல் கொள்முதல் செய்யப்படாததை கண்டித்து கடந்த 3-ந் தேதி டிராக்டரை சாலையின் குறுக்கே நிறுத்தி விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது 2-வது முறையாக விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story