திருவண்ணாமலை: பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாம் தொடக்கம்
திருவண்ணாமலையில் பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாம் தொடங்கியது.
திருவண்ணாமலை,
இந்தியன் ரெட் கிராஸ் சங்கம் திருவண்ணாமலை மாவட்ட கிளை சார்பில் முதலுதவி மற்றும் பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாம் திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. பயிற்சி முகாமை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி முன்னிலை வகித்தார். மாவட்ட ரெட் கிராஸ் சங்க செயலாளர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார்.
இதில் மாவட்ட ரெட் கிராஸ் சங்க தலைவர் இந்திரராஜன் தொடக்கவுரையாற்றினார். முன்னதாக பயிற்சி முகாமில் வைக்கப்பட்டு இருந்த பேரிடர் காலங்களில் பயன்படுத்தப்படும் பொருட்களான மரம் அறுக்கும் எந்திரம் உள்ளிட்டவற்றை கலெக்டர் பார்வையிட்டார்.

Related Tags :
Next Story