வீரசோழன் ஆற்றில் உடைப்பு: வீடு-வயல்களை தண்ணீர் சூழ்ந்தது
பொறையாறு அருகே வீரசோழன் ஆற்றில் உடைப்பு ஏற்பட்டதால் வீடு- வயல்களை தண்ணீர் சூழ்ந்தது.
பொறையாறு,
நாகை மாவட்டம் மயிலாடுதுறை, பொறையாறு, தரங்கம்பாடி, சங்கரன்பாந்தல், காட்டுச்சேரி, தில்லையாடி, காழியப்பநல்லூர், நல்லாடை, திருவிளையாட்டம், இலுப்பூர், மேமாத்தூர், கீமாத்தூர், திருவிடைக்கழி, விசலூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. சில இடங்களில் சம்பா நடவு செய்த வயல்களை தண்ணீர் சூழ்ந்து உள்ளது. இந்நிலையில் பொறையாறு அருகே சிதம்பரபெருமாள்கோவில்பத்து கிராமம் அருகே செல்லும் வீரசோழனாற்றில் அதிக அளவு தண்ணீர் சென்றதால் நேற்று ஆற்றின் தெற்கு கரைபகுதியில் உடைப்பு ஏற்பட்டது.
இதனால் சில இடங்களில் ஆற்று தண்ணீர் அங்குள்ள வயல்களில் புகுந்தது. மேலும், அப்பகுதியில் உள்ள வீடுகளையும் தண்ணீர் சூழ்ந்தது. வீடுகளை தண்ணீர் சூழ்ந்ததால் சில வீடுகளில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்தன. இதனால் அச்சம் அடைந்த பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறி தெருக்களில் வந்து நின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த பவுன்ராஜ் எம்.எல்.ஏ. மேற்கண்ட இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீர் புகுந்த பகுதிகளை பார்வையிட்டார். அப்போது எம்.எல்.ஏ., பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கவும், ஆற்றின் கரையில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்யவும் நடவடிக்கை மேற்கொண்டார். மேலும் சிதம்பரபெருமாள்கோவில்பத்து கிராமத்துக்கு போலீஸ் பேரிடர் மீட்புக்குழுவினர் சென்று வீரசோழனாற்றில் ஏற்பட்டுள்ள உடைப்பை அடைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

Related Tags :
Next Story