மாவட்ட செய்திகள்

குப்பை மறுசுழற்சி மையம் அமைக்க எதிர்ப்பு: அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள் + "||" + Setting up garbage recycling center: Civilians besieged by the authorities

குப்பை மறுசுழற்சி மையம் அமைக்க எதிர்ப்பு: அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள்

குப்பை மறுசுழற்சி மையம் அமைக்க எதிர்ப்பு: அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள்
குப்பை மறுசுழற்சி மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சி அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அனுப்பர்பாளையம்,

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளிலும் மக்கும் குப்பை மறுசுழற்சி மையம் மற்றும் அணு உரமாக்கும் மையம் அமைக்க மாநகராட்சி சார்பில் தனித்தனி இடங்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி 30-வது வார்டுக்குட்பட்ட பிச்சம்பாளையத்தை அடுத்த கேத்தம்பாளையம் முனியப்பன் கோவில் அருகில் உள்ள காலி இடத்தில் குப்பை மறுசுழற்சி மையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.


இந்தநிலையில் நேற்று காலை 2-வது மண்டல அதிகாரிகள் பொக்லைன் எந்திரத்துடன் சென்று, குப்பை மறுசுழற்சி மையம் அமைய உள்ள அந்த இடத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதி பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சம்பவ இடத்தில் திரண்டனர்.

பின்னர் அந்த இடத்தில் குப்பை மறுசுழற்சி மையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற 2-வது மண்டல சுகாதார அலுவலர் ராமச்சந்திரன், சுகாதார ஆய்வாளர் சின்னத்துரை மற்றும் மாநகராட்சி அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த அனுப்பர்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து அந்த இடத்தில் சுழற்சி மையம் அமைக்கப்படாது என்று உறுதி அளித்தனர். இதன் பின்னரே பொதுமக்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. காஸா போர் நிறுத்த முடிவுக்கு எதிர்ப்பு - இஸ்ரேல் ராணுவ மந்திரி ராஜினாமா
காஸா போர் நிறுத்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இஸ்ரேல் ராணுவ மந்திரி ராஜினாமா செய்தார்.
2. மயிலாடுதுறையில் மதுக்கடையை முற்றுகையிட முயன்ற 23 பேர் கைது
மயிலாடுதுறையில் மதுக்கடையை முற்றுகையிட முயன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து 23 பேரை போலீசார் கைது செய்தனர்.
3. சுடுகாட்டில் உடல் தகனம் செய்ய எதிர்ப்பு: சாலை மறியலுக்கு முயன்ற பொதுமக்கள்
சேலத்தில் சுடுகாட்டில் உடல் தகனம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலுக்கு முயற்சி செய்தனர்.
4. சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு: கோத்தகிரியில் அய்யப்ப பக்தர்கள் பேரணி
சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து கோத்தகிரியில் அய்யப்ப பக்தர்கள் பேரணி சென்றனர்.
5. ஜெயங்கொண்டம் அனல்மின் திட்டம்; கருத்து கேட்பு கூட்டத்தில் விவசாயிகள் எதிர்ப்பு
ஜெயங்கொண்டம் அனல்மின் திட்டம்; கருத்து கேட்பு கூட்டத்தில் விவசாயிகள் எதிர்ப்பு.