பெட்ரோல்– டீசல் விலை உயர்வை கண்டித்து பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்


பெட்ரோல்– டீசல் விலை உயர்வை கண்டித்து பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 Oct 2018 4:00 AM IST (Updated: 6 Oct 2018 3:20 AM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல்– டீசல் விலை உயர்வை கண்டித்து பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விழுப்புரம்,

பெட்ரோல்– டீசல் விலை உயர்வை கண்டித்தும், இந்த விலை உயர்வை உடனே திரும்ப பெற வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் நேற்று பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று காலை பா.ம.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பலத்த மழை பெய்தது. அதையும் பொருட்படுத்தாமல் அனைவரும் குடைபிடித்தபடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் தலைமை தாங்கினார். மாநில இணை பொதுச்செயலாளர் இசக்கி, துணை பொதுச்செயலாளர் தங்கஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் புகழேந்தி அனைவரையும் வரவேற்றார்.

இதில் மாநில நிர்வாகிகள் ஹரிகரன், பழனிவேல், ஜெகன், தன்ராசு, மாவட்ட நிர்வாகிகள் ஆதிநாராயணயாதவ், புண்ணியகோடி, தமிழ்வாணன், தவஞானம், பானுப்பிரியா செந்தில்குமார், சீனிவாசன், சிவக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேல்மலையனூர் தாலுகா அலுவலாகம் முன்பு பா.ம.க.சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு முன்னாள் எம்.பி. துரை தலைமை தாங்கினார். மாநில வன்னியர் சங்க துணை தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் கலியபெருமாள் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், அய்யனார், ஜெயக்குமார், சீனு தமிழ்ச்செல்வன், சேகர், நிர்வாகிகள் ரமேஷ், கோவிந்தன், முருகன் உள்ளிட்ட பா.ம.க.வினர் கலந்து கொண்டு பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கண்டன கோ‌ஷங்கள் எழுப்பினர்.

இதேபோல் சங்கராபுரம் தாலுகா அலுவலகம் முன்பு மாவட்ட அமைப்பு செயலாளர் பப்லு தலைமையில் மாவட்ட துணை தலைவர் கோவிந்தராஜ், மாவட்ட துணை செயலாளர் லோகநாதன் ஆகியோர் முன்னிலையில் பா.ம.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஒன்றிய செயலாளர் ராமு, நகர செயலாளர் ஜெகன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கண்டன கோ‌ஷம் எழுப்பினர்.


Next Story