மதுபான பாரில் தகராறு; ஊழியர் அடித்து கொலை


மதுபான பாரில் தகராறு; ஊழியர் அடித்து கொலை
x
தினத்தந்தி 6 Oct 2018 3:59 AM IST (Updated: 6 Oct 2018 3:59 AM IST)
t-max-icont-min-icon

மதுபான பாரில் ஊழியரை அடித்து கொலை செய்த வாடிக்கையாளரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

மும்பை எல்பின்ஸ்டன் ரெயில் நிலையம் அருகே ஒரு மதுபான பார் உள்ளது. இந்த பாரில் கணேஷ் (வயது 25) என்பவர் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு சைலேஷ் என்பவர் அங்கு வந்து மது குடித்தார். உணவும் சாப்பிட்டார்.

இதையடுத்து அதற்கான பணத்தை கொடுக்கும்படி ஊழியர் கணேஷ் அவரிடம் ரசீதை கொடுத்தார். ஆனால் சைலேஷ் பணத்தை கொடுக்க மறுத்து ஊழியரிடம் வாக்குவாதம் செய்தார்.

இதில் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த சைலேஷ் அங்கிருந்த ஐஸ்கட்டியை உடைக்கும் இரும்பு கம்பியை எடுத்து கணேசை சரமாரியாக தாக்கினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்த பார் ஊழியர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

தகவல் அறிந்து வந்த என்.எம். ஜோஷி மார்க் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து சைலேசை கைது செய்தனர்.

Next Story