கூட்டணி ஆட்சியில் காங்கிரசுக்கு மரியாதை இல்லையா? பா.ஜனதா கேள்வி


கூட்டணி ஆட்சியில் காங்கிரசுக்கு மரியாதை இல்லையா? பா.ஜனதா கேள்வி
x
தினத்தந்தி 6 Oct 2018 5:23 AM IST (Updated: 6 Oct 2018 5:23 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி நேற்று டெல்லியில் உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங்கை சந்தித்து பேசினார்.

பெங்களூரு,

முன்னாள் பிரதமர் தேவேகவுடா, பொதுப்பணித்துறை மந்திரி எச்.டி.ரேவண்ணா ஆகியோர் உடன் இருந்தனர். காங்கிரஸ் மந்திரிகள் யாரும் உடன் இருக்கவில்லை. இதை விமர்சித்து கர்நாடக பா.ஜனதா தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளது. அதில் கூறி இருப்பதாவது:-

காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சியில் காங்கிரசுக்கு மரியாதை இல்லையா?. இந்த கூட்டணி ஆட்சியை நடத்துபவர்கள் யார்?. கூட்டணி ஆட்சி என்றால், தேவேகவுடா மற்றும் அவரது மகன்கள் மட்டும் தானா?. இதில் காங்கிரசுக்கு இடம் இல்லையா?.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story