தென்திருப்பேரை, விளாத்திகுளத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம்


தென்திருப்பேரை, விளாத்திகுளத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 7 Oct 2018 3:30 AM IST (Updated: 6 Oct 2018 7:24 PM IST)
t-max-icont-min-icon

தென்திருப்பேரை, விளாத்திகுளத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.

தென்திருப்பேரை,

தென்திருப்பேரை, விளாத்திகுளத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.

ஆலோசனை கூட்டம்

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம், தென்திருப்பேரையில் உள்ள ஆழ்வார்திருநகரி யூனியன் அலுவலகத்தில் நேற்று நடந்தது. ஊரக வளர்ச்சி முகமை திட்ட பொறியாளர் சங்கரஜோதி தலைமை தாங்கினார். யூனியன் ஆணையாளர்கள் சிவராஜன், சுடலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மழைக்காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், ஜெனரேட்டர், மர அறுப்பு எந்திரம், டார்ச் லைட், முதலுதவி பெட்டி போன்றவற்றை தயார் நிலையில் வைத்திருப்பது குறித்து அறிவுறுத்தப்பட்டது. ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் யூனியன் அலுவலர்களை பொறுப்பாளர்களாக நியமித்து, அங்கு தேவையான வசதிகள், மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அறிக்கை பெறப்பட்டது.

ஊரக வளர்ச்சி முகமை திட்ட உதவி பொறியாளர்கள் கார்த்திகேயன், கிறிஸ்டி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சின்னத்துரை, பழனிசாமி, ஜான்சிராணி, ஜெயலட்சுமி, சுப்பிரமணியன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விளாத்திகுளம்

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்தில் நடந்தது. தாசில்தார் ராஜ்குமார் தலைமை தாங்கினார். போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார், யூனியன் ஆணையாளர் தங்கவேல் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மழைக்காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், ஜெனரேட்டர், மரம் அறுக்கும் எந்திரம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை தயார் நிலையில் வைத்திருப்பது குறித்து அறிவுறுத்தப்பட்டது.


Related Tags :
Next Story