களியக்காவிளை அருகே சாலைகளை சீரமைக்கக்கோரி காங்கிரசார் மறியல்
களியக்காவிளை அருகே சாலைகளை சீரமைக்க கோரி காங்கிரஸ் கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
களியக்காவிளை,
குமரி மேற்கு மாவட்ட பகுதியில் உள்ள சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் இருப்பதாகவும், அவற்றை சீரமைக்க வேண்டும் எனவும் காங்கிரசார் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்த கோரிக்கையை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, நேற்று காலையில் களியக்காவிளை அருகே கோழிவிளை சந்திப்பில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஏராளமானோர் கூடினர். தொடர்ந்து, சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என கூறி மறியலில் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்கு ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். செல்வராஜ், சுனில்குமார், கிறிஸ்டோபர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிரின்ஸ் எம்.எல்.ஏ. போராட்டத்தை விளக்கி பேசினார்.
போராட்டத்தின் போது, குமரி மேற்கு மாவட்டத்தில் சேதமடைந்த அனைத்து சாலைகளையும் சீரமைக்க வேண்டும் எனவும், குறுகலாக உள்ள கோழிவிளை– மங்காடு சாலை, கணபதியான்கடவு– பொன்னப்பர் நகர் சாலை, கோளஞ்சேரி–நடைகாவு சாலை போன்றவை விரிவு படுத்த வேண்டும் என்றும் கோஷமிடப்பட்டது.
இதில், மாவட்ட செயலாளர் ஸ்டூவர்ட், வர்த்தக காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஆமோஸ், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ரவிசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
போராட்டம் குறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சேதமடைந்த சாலைகளை சீரமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story