அத்திவாக்கம், மலைப்பட்டில் அம்மா திட்ட முகாம்


அத்திவாக்கம், மலைப்பட்டில் அம்மா திட்ட முகாம்
x
தினத்தந்தி 6 Oct 2018 10:15 PM GMT (Updated: 6 Oct 2018 7:06 PM GMT)

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தை அடுத்த அத்திவாக்கம் ஊராட்சியில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு ஊத்துக்கோட்டை தனி தாசில்தார் லதா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து 12 கோரிக்கை மனுக்களை பெற்றுகொண்டார்.

பெரியபாளையம்,

மண்டல துணை தாசில்தார்கள் ராஜேஷ், ஜெகதீசன், வருவாய் ஆய்வாளர் சீனிவாசன், கிராம நிர்வாக அதிகாரிகள் முருகையன், சுயம்புராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முதியோர் உதவித்தொகை, ரேஷன்கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், பட்டா கோருதல் உள்ளிட்ட 12 கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்களிடம் இருந்து ஊத்துக்கோட்டை தனி தாசில்தார் லதா பெற்றுகொண்டார்.

இதில், 5 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. 7 மனுக்கள் விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. உடனடி தீர்வு காணப்பட்ட 5 மனுக்களுக்கு அதற்கான ஆணையை ஊத்துக்கோட்டை தனி தாசில்தார் லதா பயனாளிகளுக்கு வழங்கி பேசினார். முன்னதாக அனைவரையும் கிராம உதவியாளர்கள் மல்லி, சரவணன் ஆகியோர் வரவேற்றனர். முடிவில் தேவேந்திரன் நன்றி கூறினார்.

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பையை அடுத்த மலைப்பட்டு கிராமத்தில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஸ்ரீபெரும்புதூர் தாசில்தார் ரவிச்சந்திரன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து 28 மனுக்களை பெற்றுக்கொண்டார். சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் கவிதா, துணை தாசில்தார் பூபாலன், வருவாய் ஆய்வாளர் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 13 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. மற்ற மனுக்கள் விசாரனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

முகாமில் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, இயற்கை மற்றும் ஈமச்சடங்கு நிவாரணம் 15 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. முன்னதாக அனைவரையும் கிராம நிர்வாக அலுவலர் இளையராஜா வரவேற்றார். இதில் மலைப்பட்டு சீனிவாசன், மற்றும் கிராம நிர்வாக உதவியாளர் விஜயபாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் நுங்கம்பாக்கம் ஊராட்சியில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. இதற்கு வருவாய் ஆய்வாளர் காதர் பர்வீன்பேகம் தலைமை தாங்கினார். கிராம நிர்வாக அலுவலர் ரவிச்சந்திரன், காளிராஜன், உமா, கவுஸ்பாஷா, தியாகராஜன், சுவேதா, ஊராட்சி செயலாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக மண்டல துணை தாசில்தார் வெங்கடேஷ் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். இதில் கிராம உதவியாளர்கள் மாரியம்மாள், வேலு, முருகேசன், சத்தியநாராயணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story