தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் 297 நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படுகிறது அமைச்சர் பேட்டி
தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் 297 நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படுகிறது என்று அமைச்சர் காமராஜ் கூறினார்.
வடுவூர்,
மத்திய அரசின் ‘விவசாயிகளுக்கான இரண்டு மடங்கு உற்பத்தி மூன்று மடங்கு வருமானம்’ என்ற திட்டத்தின்கீழ் திருவாரூர் மாவட்டம் வடுவூரில் சிறு மற்றும் குறு விவசாயிகள் என ஆயிரம் விவசாயிகள் சேர்ந்து ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்தினர். இந்த கூட்டமைப்பில் விவசாயிகளே பங்குதாரர்களாக உள்ளனர்.
இந்த கூட்டமைப்பின் ஆண்டு கூட்டம் வடுவூரில் நடந்தது. இந்த கூட்டத்தில் அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டு விவசாயிகளை கவுரவித்தார். இயக்குனர் சீராளன் தலைமை தாங்கினார். விவசாயிகள் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைவர் ராஜா வரவேற்றார். மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சந்துரு, வேளாண்மை துணை இயக்குனர்கள் கல்யாணசுந்தரம், கிருஷ்ணமூர்த்தி, வடுவூர் கூட்டுறவு வங்கி இயக்குனர் அரிகிருஷ்ணன், மன்னார்குடி நிலவள வங்கி தலைவர் செந்தில்ராஜ், வேளாண் அலுவலர் ராணி உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் மணிகண்டன் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார்.
கூட்டத்தில் அமைச்சர் காமராஜ் பேசியதாவது:-
தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 1 கோடியே 97 லட்சம் பேருக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. தஞ்சை மாவட்டத்தில் 93 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும், திருவாரூர் மாவட்டத்தில் 98 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 106 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும் செயல்பட்டு வருகிறது. நெல் கொள்முதல் செய்வது நிறுத்தப்படவில்லை.
மத்திய அரசில் பருவ காலங்களை இரண்டாக பிரித்து இருக்கிறார்கள். அக்டோபர் 1-ந் தேதி முதல் காரிப் பருவம் தொடங்கும். அதிலிருந்து தான் குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு என்பது அமலுக்கு வரும். மத்திய அரசு கொடுத்திருக்கிற ஆதார விலையும், தமிழக அரசு கொடுக்கின்ற ஊக்கத்தொகையும் சேர்த்து புதிய விலை நிர்ணயித்து அக்டோபர் 1-ந் தேதி முதல் அமலுக்கு வரும். அதனால் 15 நாட்களுக்கு முன்பு அறுவடை செய்த நெல், நேரடி கொள்முதல் நிலையங்களில் தற்போது தேக்கி வைக்கப்பட்டு இருக்கிறது.
அதற்கு காரணம், விவசாயிகளுக்கு குவிண்டாலுக்கு ரூ.200 கூடுதலாக கிடைக்கும் என்ற காரணத்தினால் தான். 15 நாட்களுக்கு முன்பு வந்த நெல் கொள்முதல் செய்யப்படாமல் தேக்கத்தில் இருக்கிறது. இதனை உடனடியாக எடுப்பதில் சிறிது பிரச்சினை இருக்கிறது.
விவசாயிகள் அறுவடை எந்திரங்களை கொண்டு அறுவடை செய்வதால் மொத்தமாக நெல் சேர்ந்துள்ளதால் தேக்கம் அடைந்துள்ளது. இது விரைவில் சரி செய்யப்படும். இரண்டு நாட்களுக்கு முன்னர் கூட தஞ்சை மாவட்டத்தில் சாக்கு பற்றாக்குறை என தகவல் வந்தவுடன் உடனடியாக 5 லட்சம் சாக்குகளை நானே நேரில் நின்று அனுப்பி வைத்தேன். இந்தியாவிலேயே தமிழக அரசு தான் நேரடி நெல் கொள்முதல் செய்கிறது. அதற்கு மானியமும் வழங்குகிறது என்பதை பெருமையுடன் தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் வடுவூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story