திருவல்லிக்கேணியில் 584 நட்சத்திர ஆமைகள் பறிமுதல் வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற 2 பேர் கைது
திருவல்லிக்கேணியில் 584 நட்சத்திர ஆமைகள் பறிமுதல் வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற 2 பேர் கைது செய்தனர்.
சென்னை,
சென்னை திருவல்லிக்கேணிக்கு அரிய வகை நட்சத்திர ஆமைகளை மர்ம ஆசாமிகள் சிலர் கடத்தி கொண்டு வர உள்ளதாக வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் திருவல்லிக்கேணியில் முகாமிட்டனர்.
அப்போது அந்த பகுதியில் கையில் 6 பைகளுடன் சந்தேகப்படும் வகையில் நின்றுகொண்டிருந்த 2 பேரை பிடித்து சோதனை செய்தனர். அந்த ஆசாமிகள் வைத்திருந்த பையில் 584 நட்சத்திர ஆமைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆமைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த ஆசாமிகள் 2 பேரையும் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், “ஆந்திராவில் இருந்து சென்னைக்கு நட்சத்திர ஆமைகள் கடத்தி கொண்டுவரப்பட்டதும், தென் தமிழக கடலோரமாக வெளிநாடுகளுக்கு கடத்த முயன்றதும் தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் மத்தியபிரதேசம், ஆந்திரா மற்றும் தமிழகத்தை மையமாக கொண்டு நட்சத்திர ஆமை கடத்தலில் ஈடுபட்டு வந்ததும்” தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

Related Tags :
Next Story