நாகைக்கு பேரிடர் மீட்பு குழுவினர் வருகை


நாகைக்கு பேரிடர் மீட்பு குழுவினர் வருகை
x
தினத்தந்தி 6 Oct 2018 10:30 PM GMT (Updated: 6 Oct 2018 8:39 PM GMT)

நாகைக்கு பேரிடர் மீட்பு குழுவினர் நேற்று வந்தனர்.

நாகப்பட்டினம்,

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தற்போது பரவலாக மழைபெய்து வருகிறது. இந்தநிலையில் அரபிக்கடலின் தென்கிழக்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதனால் நாகை மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

அனைத்து மாவட்டங் களிலும் முன்எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அரக்கோணத்தில் இருந்து 30 பேர் கொண்ட பேரிடர் மீட்பு குழுவினர் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையில் நாகைக்கு நேற்று வந்துள்ளனர்.

இந்த மீட்பு குழுவினருடன் உள்ளூர் போலீசார் 100 பேர் இணைந்து 5 குழுக்களாக பிரிந்து மீட்பு பணியில் ஈடுபட உள்ளனர். நாகை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வைக்கப்படிருந்த பேரிடர் மீட்பு கருவிகளை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் சந்திரமோகன், சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Next Story