சிறுமியை பாலியல் பலாத்காரம்: பாலிடெக்னிக் மாணவருக்கு 10 ஆண்டு ஜெயில்
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பாலிடெக்னிக் கல்லூரி மாணவருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து வேலூர் மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
வேலூர்,
ஆம்பூர் தாலுகா, மாதனூர், பாலாஜி நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் பிரேம்குமார் (வயது 22), குடியாத்தத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். இவர் கடந்த 5.3.2016 அன்று அதே பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமியை உறவினர் அழைப்பதாக கூறி, தன் வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் ஆம்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரேம்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை வேலூர் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது.
இதற்கிடையே ஜாமீனில் வெளியே வந்த அவர், தொடர்ந்து கல்லூரியில் படித்து வந்தார். சிறுமி பாலியல் பலாத்காரம் தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வக்கீல் லட்சுமிபிரியா ஆஜரானார்.
இந்த வழக்கை நீதிபதி செல்வம் விசாரித்து தீர்ப்பு கூறினார். அதில், பிரேம்குமாருக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 10 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்யும் நோக்கில் கடத்தி சென்றதற்காக 7 ஆண்டு ஜெயில் தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார். இந்த தண்டனைகளை அவர் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும், அபராதத்தொகையை கட்டத்தவறினால் கூடுதலாக 4 மாதம் ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய இழப்பீடு வழங்க மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவுக்கு அவர் பரிந்துரை செய்தார். இதையடுத்து பிரேம்குமாரை போலீசார் பலத்த காவலுடன் வேலூர் மத்திய ஜெயிலுக்கு அழைத்து சென்று அடைத்தனர்.

Related Tags :
Next Story