மாவட்ட செய்திகள்

என்ஜினில் கோளாறு: ஊட்டி மலைரெயில் நடுவழியில் நின்றது + "||" + Engine injuries: Ooty Mountain Rail Stood in the way

என்ஜினில் கோளாறு: ஊட்டி மலைரெயில் நடுவழியில் நின்றது

என்ஜினில் கோளாறு: ஊட்டி மலைரெயில் நடுவழியில் நின்றது
என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஊட்டி மலைரெயில் நடுவழியில் நின்றது. இதனால் சுற்றுலா பயணிகள் அவதியடைந்தனர்.

குன்னூர்,

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலைரெயில் இயக்கப்படுகிறது. இந்த மலைரெயிலில் பயணம் செய்ய சுற்றுலா பயணிகள் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை பல் சக்கர தண்டவாளம் என்பதால் நீராவி என்ஜின் மூலம் 4 பெட்டிகளுடன் மலைரெயில் இயக்கப்படுகிறது. குன்னூரில் இருந்து ஊட்டிக்கு 5 பெட்டிகளுடன் டீசல் என்ஜின் மூலம் இயக்கப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு 210 பயணிகளுடன் காலை 7.15 மணிக்கு மலைரெயில் புறப்பட்டது. ஹில்குரோவ் ரெயில் நிலையம் அருகே வந்தபோது திடீரென என்ஜினில் கோளாறு ஏற்பட்டது. இதனால் நடுவழியில் மலைரெயில் நின்றது. இதனால் சுற்றுலா பயணிகள் அவதியடைந்தனர்.

பின்னர் குன்னூர் ரெயில் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நடுவழியில் நின்ற மலைரெயிலில் இருந்து சுற்றுலா பயணிகளை மீட்டு குன்னூருக்கு கொண்டு வர 4 பெட்டிகளுடன் மீட்பு ரெயில் காலை 11 மணிக்கு தயாரானது. ஆனால் மழை பெய்ததால் ரன்னிமேடு ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் பாறை விழுந்தது. உடனே அங்கு சென்ற ரெயில்வே ஊழியர்கள் பாறையை அகற்றினர். பின்னர் குன்னூரில் இருந்து 12 மணிக்கு மீட்பு ரெயில் புறப்பட்டு சென்றது. தொடர்ந்து சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு மீண்டும் குன்னூருக்கு வந்து சேர்ந்தது. இதற்கிடையே மலைரெயில் என்ஜினில் கோளாறு சரி செய்யப்பட்டது. தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு தாமதமாக குன்னூர் ரெயில் நிலையத்துக்கு மலைரெயில் வந்தது. இந்த சம்பவத்தால் குன்னூர்– மேட்டுப்பாளையம் இடையே மலைரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.தொடர்புடைய செய்திகள்

1. தாம்பரம்– கொல்லம் இடையே தினசரி ரெயில் இயக்க வேண்டும்; தென்னக ரெயில்வேயிடம் வலியுறுத்தல்
தாம்பரம்–கொல்லம் இடையே தற்போது வாரம் 3 முறை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயிலை நிரந்தரமாக தினசரி ரெயிலாக இயக்க தென்னக ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
2. வருகிற 20, 27-ந்தேதிகளில் கரூர் மார்க்க ரெயில் சேவையில் மாற்றம்
கரூர் மார்க்க ரெயில் சேவையில் வருகிற 20, 27-ந் தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
3. சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக கரூர் பஸ்- ரெயில் நிலையங்களில் குவிந்த மக்கள்
சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக கரூர் பஸ் மற்றும் ரெயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.
4. பயணிகளுக்கு பண்டிகை கால பரிசு: 47 ரெயில்களில் சிறப்பு கட்டணம் ரத்து
47 ரெயில்களில் சிறப்பு கட்டணத்தை ரெயில்வே நிர்வாகம் ரத்து செய்துள்ளது. 101 ரெயில்களில் சிறப்பு கட்டணத்தை குறைத்துள்ளது.
5. ஆந்திர மாநிலத்தில் இருந்து சரக்கு ரெயில் மூலம் 2,500 டன் ரே‌ஷன் அரிசி நெல்லைக்கு வந்தது
ஆந்திர மாநிலத்தில் இருந்து சரக்கு ரெயில் மூலம் 2 ஆயிரத்து 500 டன் ரே‌ஷன் அரிசி நெல்லைக்கு வந்தது.