நாடாளுமன்ற உறுப்பினர்கள் தத்தெடுக்கும் கிராமங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்குவதில்லை - எம்.பி.க்கள் குற்றச்சாட்டு
நாடாளுமன்ற உறுப்பினர்கள் தத்தெடுக்கும் கிராமங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்குவதில்லை என்று எம்.பி.க்கள் குற்றம் சாட்டினர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் மத்திய, மாநில அரசு திட்டங்களின் பணி முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்வதற்காக மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பார்வை குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. ஆரணி தொகுதி செஞ்சி சேவல் வி.ஏழுமலை எம்.பி. தலைமை தாங்கினார்.
இந்து சமய அறநிலையத்தறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவண்ணாமலை தொகுதி ஆர்.வனரோஜா எம்.பி. வரவேற்றார்.
இதில் எம்.எல்.ஏ.க்கள் தூசி கே.மோகன், பன்னீர்செல்வம், கு.பிச்சாண்டி, கிரி, கே.வி.சேகரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், இந்திரா நினைவு குடியிருப்பு திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், தூய்மை இந்தியா உள்பட 23 திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அப்போது எம்.பி.க்களும், எம்.எல்.ஏ.க்களும் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு கலெக்டர் உள்பட அதிகாரிகள் பதில் அளித்தனர்.
கூட்டத்தில் கிரி எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் தத்தெடுக்கும் கிராமங்களுக்கு எவ்வாறு அரசு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. மத்திய அரசு போதிய அளவு நிதி ஒதுக்குகிறதா? என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு எம்.பி.க்கள், நாங்கள் தத்தெடுக்கும் கிராமங்களுக்கு திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு நிதி ஒதுக்குவதில்லை என்றனர். பின்னர் கிரி எம்.எல்.ஏ. பேசுகையில், திட்டங்கள் சரிவர செய்யவில்லை என்றால் எம்.பி.க்களின் பெயர்தானே கெடும் என்றார்.
நாடாளுமன்ற தொகுதி நிதி மற்றும் வழக்கமாக செயல்படுத்தப்படும் திட்டங்களில் இருந்து நிதி பெற்று நாடாளுமன்ற உறுப்பினர் தத்தெடுக்கும் கிராமங்களில் செயல்படுத்தப்படுகிறது என்று செஞ்சி சேவல் ஏழுமலை எம்.பி. கூறினார். பின்னர் அவர், திண்டிவனத்தில் இருந்து நகரி வரை செல்லும் ரெயில் பாதை திட்டம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டம் முடிந்தவுடன் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பார்வை குழு கூட்டம் நடந்தது. இதில் திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டம், இந்திரா நினைவு குடியிருப்பு திட்டம் உள்பட பல்வேறு திட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தமிழக அரசு கடந்த 3 ஆண்டுகளில் சுமார் ரூ.453 கோடி மதிப்பில் ஊரக வளர்ச்சி முகமை திட்டத்தின் மூலம் மகாத்மா காந்தி தேசிய வேலை வாய்ப்பு உறுதி அளிப்பு திட்டத்திற்கு செலவு மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அதற்காக மத்திய அரசால் நமது மாவட்டத்திற்கு முதன்மை விருது வழங்கப்பட்டு உள்ளது. மேலும் தமிழகத்திற்கு 3 விருதுகள் வழங்கப்பட்டு உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது என்று அவர் கூறினார்.

Related Tags :
Next Story