2 வயது சிறுவனை கடத்திய இளம்பெண் கைது


2 வயது சிறுவனை கடத்திய இளம்பெண் கைது
x
தினத்தந்தி 7 Oct 2018 4:01 AM IST (Updated: 7 Oct 2018 4:01 AM IST)
t-max-icont-min-icon

மும்பை ஜே.ஜே. மார்க் சஞ்சய் காந்தி நகர் பகுதியை சேர்ந்த பெண் தனது 2 வயது மகனுடன் வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

மும்பை,

 மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள அந்த பகுதியில், கையைப்பிடித்து வந்து கொண்டிருந்த சிறுவன் திடீரென தாயின் பிடியில் இருந்து மாயமானான். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுவனின் தாய் உறவினர்கள் உதவியுடன் அங்குள்ள கடை உள்ளிட்ட பகுதிகளில் தேடி அலைந்தார்.

அப்போது இளம்பெண் ஒருவர் அழுது  கொண்டிருந்த சிறுவனை தூக்கி சென்றதை அப்பகுதியை சேர்ந்த கடைக்காரர்கள் பார்த்தனர். இதனால் சந்தேகம் அடைந்த கடைக்காரர்கள் இளம்பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அந்த இளம்பெண் தான் காணாமல் போன சிறுவனை கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து அழுது கொண்டிருந்த சிறுவனை மீட்டு அவனது தாயிடம் ஒப்படைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கடத்திய இளம்பெண்ணை அதிரடியாக கைது செய்தனர். விசாரணையில் அவரது பெயர் ஜோதி சவான் (வயது20) என்பது தெரியவந்தது. போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story