சோதனையில் 2 அரசு அதிகாரிகள் வீடுகளில் சிக்கியது, 19¾ கிலோ தங்கம் : ஊழல் தடுப்பு படை ஐ.ஜி. பேட்டி
அதிரடி சோதனையில் 2 அரசு அதிகாரிகள் வீடுகளில் 19¾ கிலோ தங்கம் சிக்கியது என்று ஊழல் தடுப்பு படை ஐ.ஜி. சந்திரசேகர் கூறினார்.
பெங்களூரு,
பெங்களூரு ஊழல் தடுப்பு படை அலுவலகத்தில் ஐ.ஜி. சந்திரசேகர் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கர்நாடக தொழில் வளர்ச்சி வாரியத்தின் தலைமை அதிகாரியாக இருந்து வருபவர் டி.ஆர்.சுவாமி. பெங்களூரு வளர்ச்சி ஆணையத்தின் என்ஜினீயராக இருப்பவர் கவுடய்யா. இவர்கள் 2 பேரும் தங்களின் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக புகார்கள் வந்தன. இந்த புகார்களின் அடிப்படையில் ஒரு வாரமாக அவர்கள் பற்றிய விவரங்களை சேகரித்து வந்தோம்.
அதைத்தொடர்ந்து, பெங்களூருவில் உள்ள 2 அதிகாரிகளின் வீடு, அலுவலகங்கள் மற்றும் உறவினர்கள் வீடுகள் என்று மொத்தம் 8 இடங்களில் நேற்று (அதாவது நேற்று முன்தினம்) ஊழல் தடுப்பு படை சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை இரவு வரை நீடித்தது. இந்த சோதனைகளின்போது, தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், சொத்து பத்திரங்கள் மற்றும் வெவ்வேறு ஆவணங்கள் கைப்பற்றி பரிசீலனை செய்யப்பட்டன.
அதன்படி, என்ஜினீயர் கவுடய்யா மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர்களின் பெயர்களில் 2 வீடுகள், 8 வீட்டு மனைகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் 14 பிளாட்டுகள், 18 கிலோ 200 கிராம் தங்க நகைகள், 10 கிலோ வெள்ளி பொருட்கள், 3 கார்கள், 3 மோட்டார் சைக்கிள்கள், ரூ.77 லட்சம் ரொக்கம் மற்றும் வங்கி கணக்குகளில் ரூ.45 லட்சம் இருப்பு வைத்திருப்பதும் தெரியவந்துள்ளது.
டி.ஆர்.சுவாமி மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர்களின் பெயரில் 8 வீடுகள், 11 வீட்டு மனைகள், வெவ்வேறு இடங்களில் 14 ஏக்கரில் விவசாய நிலங்கள், ஒரு கிலோ 600 கிராம் தங்கம், 7½ கிலோ வெள்ளி பொருட்கள், 3 கார், ரூ.4 கோடியே 52 லட்சம் ரொக்கம் ஆகியவை சிக்கியது தெரியவந்துள்ளது. 2 அதிகாரிகளிடம் சேர்த்து மொத்தம் 19 கிலோ 800 கிராம் தங்கமும், ரூ.5.29 கோடி ரொக்கமும் சிக்கியுள்ளது.
மேலோட்டமாக பார்க்கும்போது அதிகாரிகள் 2 பேரும் தங்களின் வருமானத்தை விட அதிகமாக சொத்து சேர்த்திருப்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக அவர்களிடம் விசாரித்து வருகிறோம். கைப்பற்றப்பட்டுள்ள மேலும் சில ஆவணங்களை ஆய்வு செய்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story