திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவில் பங்கேற்க குமரி மாவட்ட சாமி சிலைகள் ஊர்வலமாக புறப்பட்டன
திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவில் பங்கேற்க குமரி மாவட்ட சாமி சிலைகள் ஊர்வலமாக புறப்பட்டன. இதையொட்டி பத்மநாபபுரம் அரண்மனையில் நடைபெற்ற உடைவாள் மாற்றும் நிகழ்ச்சியில் கேரள மந்திரிகள் கலந்து கொண்டனர்.
தக்கலை,
திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகரமாக பத்மநாபபுரம் இருந்த போது பத்மநாபபுரம் அரண்மனையில் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்தது. அதன் பின்னர் திருவனந்தபுரத்திற்கு தலைநகரம் மாற்றப்பட்டதை தொடர்ந்து நவராத்திரி விழாவும் அங்கு மாற்றப்பட்டது.
இந்த விழாவில் கலந்து கொள்ளும் வகையில் குமரி மாவட்டத்தில் இருந்து சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன் மற்றும் பத்மநாபபுரம் தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் ஆகிய சாமி சிலைகள் திருவனந்தபுரத்திற்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்படும். பின்னர் விழா முடிந்ததும் மீண்டும் சாமி சிலைகளை குமரி மாவட்டத்திற்கு கொண்டு வருவது மரபு ஆகும்.
இந்த ஆண்டு நவராத்திரி விழா வருகிற 10–ந் தேதி தொடங்குகிறது. இதையொட்டி குமரி மாவட்ட சாமி சிலைகள் ஊர்வலமாக புறப்படும் நிகழ்ச்சி நேற்று பத்மநாபபுரம் அரண்மனையில் நடந்தது. முன்னதாக சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் சிலை பல்லக்கு வாகனத்தில் எழுந்தருளி நேற்று முன்தினம் இரவு பத்மநாபபுரம் வந்தடைந்தது. இதுபோல் குமாரகோவில் முருகன் சிலையும் பத்மநாபபுரம் வந்து சேர்ந்தது.
நேற்று காலை 7.30 மணிக்கு பத்மநாபபுரம் அரண்மனையில் உள்ள பூஜை அறையில் பாதுகாக்கப்பட்டு வரும் மன்னரின் உடைவாளை மாற்றும் பாரம்பரிய நிகழ்ச்சி நடந்தது. உடைவாளை கேரள தொல்பொருள்துறை இயக்குனர் ரஜிகுமார் எடுத்து கேரள தொல்பொருள் ஆராய்ச்சிதுறை மந்திரி கடந்தம்பள்ளி ராமச்சந்திரன் மற்றும் கேரள தேவசம் போர்டு மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் ஆகியோரிடம் வழங்கினார். பின்னர் உடை வாள் குமரி மாவட்ட தேவசம் போர்டு இணை ஆணையர் அன்புமணியிடம் ஒப்படைக்கப்பட்டது. வாளை பெற்றுக்கொண்ட அவர் தேவசம் ஊழியர் மோகன குமாரிடம் ஒப்படைத்தார். இந்த நிகழ்ச்சியில், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து தமிழ்நாடு மற்றும் கேரள போலீசார் துப்பாக்கி ஏந்தி அணிவகுப்பு மரியாதையுடன், கேரள போலீசாரின் இசை வாத்தியங்கள் முழங்க சாமி சிலைகளின் ஊர்வலம் தொடங்கியது. சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன் சிலைகள் பல்லக்கிலும், சரஸ்வதி அம்மன் சிலை யானை மீதும் வைக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. ஊர்வலத்திற்கு முன்பு மன்னரின் உடைவாளை ஏந்தியபடி தேவசம் போர்டு ஊழியர் முன் செல்ல, செண்டை மேளம் முழங்க பெண்கள் மலர்கள் தூவி சென்றனர்.
நிகழ்ச்சிகளில் பத்மநாபபுரம் எம்.எல்.ஏ. மனோதங்கராஜ், ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி ஜோதீந்திரன், பா.ஜனதா மாவட்ட துணை தலைவர் குமரி ரமேஷ், தேவசம் போர்டு தொகுதி கண்காணிப்பாளர் ஜீவானந்தம், மேலாளர் ரமேஷ் சிவகுமார் உள்பட ஊர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் தலைமையில் தமிழக போலீசாரும், கேரள போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஊர்வலம் கொல்லக்குடி முக்கு, மேட்டுக்கடை வழியாக கேரளபுரம் மகாதேவர் மற்றும் அதிசய விநாயகர் கோவிலை வந்தடைந்தது. அங்கு மதிய ஓய்வுக்கு பின்பு திருவிதாங்கோடு, அழகியமண்டபம், முளகுமூடு, காட்டாத்துறை, சாமியார்மடம், இரவிபுதூர்கடை, மார்த்தாண்டம் வழியாக இரவு குழித்துறை மகாதேவர் கோவிலை சென்றடைந்தது. வழிநெடுகிலும் பக்தர்கள் மலர் தூவி சாமி சிலைகளை வணங்கி வழியனுப்பி வைத்தனர்.
இன்று (திங்கட்கிழமை) குழித்துறையில் இருந்து ஊர்வலம் மீண்டும் புறப்படும். குமரி கேரள எல்லையான களியக்காவிளையில் கேரள அரசு சார்பில் செண்டைமேளம், இசை வாத்தியங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்படும். இன்று இரவு நெய்யாற்றின்கரை கிருஷ்ணசாமி கோவிலில் சாமி சிலைகள் தங்க வைக்கப்படும்.
நாளை (செவ்வாய்க்கிழமை) காலையில் நெய்யாற்றின்கரையில் இருந்து சாமி சிலைகள் புறப்பட்டு மாலையில் திருவனந்தபுரம் கிழக்கு கோட்டையை சென்றடையும்.
பின்னர், திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் உள்ள நவராத்திரி மண்டபத்தில் சரஸ்வதி தேவியை பூஜைக்காக அமர்த்துவர். வேளிமலை முருகன் சாமியை ஆரியசாலையில் உள்ள தேவி கோவிலிலும், முன்னுதித்த நங்கை அம்மனை செந்திட்டை பகவதி கோவிலிலும் வைத்து பூஜைகள் நடத்தப்படும்.
அதைத் தொடர்ந்து 10–ந் தேதி நவராத்திரி பூஜைகள் தொடங்கி 9 நாட்கள் நடைபெறும். பூஜைக்கு பிறகு சாமி சிலைகள் ஒரு நாள் நல்லிருப்புக்கு பின்னர் மீண்டும் குமரி மாவட்டத்திற்கு புறப்படும்.

Related Tags :
Next Story