துணைவேந்தர் நியமனத்தில் ஊழல்: சூழ்நிலை வரும் போது கவர்னர் விளக்கம் அளிப்பார் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
தமிழகத்தில் அரசு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனத்தில் நடந்த ஊழல் தொடர்பாக சூழ்நிலை வரும் போது கவர்னர் வெளிப்படையாக விளக்கம் அளிப்பார் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் இருந்து நவராத்திரி சாமி சிலைகள் திருவனந்தபுரத்துக்கு புறப்படும் நிகழ்ச்சி நேற்று தக்கலை அருகே பத்மநாபபுரத்தில் நடந்தது. இந்த விழாவில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். பின்னர், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
துணை முதல் -அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும், தினகரனுக்கும் இடையே நடப்பது பங்காளிகள் சண்டை. இந்த சண்டைக்கும் பா. ஜனதாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தமிழகத்தில் உள்ள அரசு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனத்தில் ஊழல் நடந்துள்ளதாக கவர்னர் பன்வாரி லால் புரோகித் கூறியுள்ளார். இதுகுறித்து சூழ்நிலை வரும் போது கவர்னர் வெளிப்படையாக விளக்கம் அளிப்பார்.
சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள், அது தொடர்பாக நடந்து வரும் போராட்டங்கள் பற்றி கேரள தேவசம் போர்டு மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரனிடம் பேசி உள்ளேன்.
சபரிமலைக்கு பெண்கள் செல்லலாம் என்ற விவகாரத்தால் கேரளாவுக்கும், தமிழகத்திற்கும் விரிசல் ஏற்படாது. சுவாமி அய்யப்பனை முழுமையாக உணர்ந்த பெண் பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல மாட்டார்கள்.
நானும் அய்யப்ப பக்தன்தான். சிறுவயதில் இருந்து சபரிமலை கோவிலுக்கு சென்று வருகிறேன். சபரிமலைக்கு செல்ல சில விதிமுறைகள் உள்ளது. அதை மீறி களங்கம் ஏற்படுத்தினால் அதை ஏற்றுக்கொள்ள மாட்டேன். கேரளாவில் அரசு மாற்றம் தேவைப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story