பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம் சீர்காழியில் நடந்தது


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம் சீர்காழியில் நடந்தது
x
தினத்தந்தி 7 Oct 2018 10:45 PM GMT (Updated: 7 Oct 2018 7:07 PM GMT)

சீர்காழியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சீர்காழி,

சீர்காழியில், அனைத்து ஆசிரியர் சங்கங்கள், அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு அதன் பொறுப்பாளர்கள் இளங்கோவன், பிரேமசந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினர். நிர்வாகிகள் ஸ்டாலின், திருமுருகன், கலைச்செல்வன், பிரபு, மார்க்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும். இடைநிலை முதுநிலை ஆசிரியர்களுக்கு இடையேயான ஊதிய முரண்பாடுகள் களைய வேண்டும். 21 மாத ஊதியக்குழுவின் நிலுவை தொகையை வழங்க வேண்டும். 5 ஆயிரம் அரசு பள்ளிகளை மூடும் திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில செயலாளர் என்.அசோக்குமார், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொறுப்பாளர்கள் விஜயக்குமார், அகோரமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்ட பொருளாளர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், உதயக்குமார் நன்றி கூறினார். 

Next Story