‘லிப்ட்’ கேட்டு மோட்டார் சைக்கிளில் சென்ற லாரி டிரைவரை கொன்ற வழக்கில் 3 பேர் கைது
அவினாசி அருகே ‘லிப்ட்’ கேட்டு மோட்டார் சைக்கிளில் சென்ற லாரி டிரைவரை கொன்ற வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவினாசி,
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை கரிக்காடு பகுதியை சேர்ந்தவர் குமரேசன் (வயது 55). இவர் நாமக்கல்லில் உள்ள ஒரு நிறுவனத்தில் லாரி டிரைவராக வேலை செய்து வந்தார். இவர் ஐதராபாத்தில் இருந்து லோடு ஏற்றிக்கொண்டு லாரியை கொச்சிக்கு ஓட்டிச் சென்றார். இந்த லாரி சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் கடந்த மாதம் 22-ந் தேதி சென்று கொண்டிருந்த போது அவினாசி அருகே பழுதாகியது. இதையடுத்து குமரேசன், லாரியை சாலையின் ஓரமாக நிறுத்தி விட்டு, லாரியின் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் அங்கிருந்து அவினாசி சென்று விட்டு பஸ்சில் லாரி பழுதாகி நிற்கும் இடத்திற்கு சென்றார்.
இந்த நிலையில்தான் அவினாசி அருகே பச்சாம்பாளையம் காட்டுப்பகுதியில் இரும்பு கம்பியால் தாக்கப்பட்ட நிலையில் குமரேசன் பிணமாக கிடந்தார். இது பற்றிய தகவல் அறிந்ததும் அவினாசி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குமரேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அவினாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவருடைய பையில் இருந்து ரூ.1,500-ம், செல்போனும் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இந்த கொலை தொடர்பாக அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதில் குமரேசனின் திருட்டு போன செல்போன் எண்ணை வைத்து போலீசார் துப்பு துலக்கியதில் அவினாசிபாளையத்தை சேர்ந்த கருப்பசாமி மகன் சங்கரிடம் (19) அந்த செல்போன் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சங்கர் மற்றும் 17 வயது சிறுவர்கள் 2 பேர் என மொத்தம் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் சம்பவத்தன்று சங்கர் உள்பட 3 பேரும் 2 மோட்டார் சைக்கிள்களில் அவினாசி- ஈரோடு சாலையில் நின்று கொண்டிருந்தனர். அப்போது இடம் தெரியாமல் பஸ்சை விட்டு இறங்கிய குமரேசன் அவர்களிடம் லாரி பழுதாகி நிற்கும் இடத்தை கூறி, அந்த இடத்திற்கு செல்வதற்கு ‘லிப்ட்’ கேட்டுள்ளார். இதையடுத்து அவர்கள் 3 பேரும் குமரேசனை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு பச்சாம்பாளையம் காட்டுப்பகுதிக்கு சென்றனர். போகும்போது, மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் நிரப்ப வேண்டும், பணம் இருந்தால் கொடு என்று குமரேசனிடம் கேட்டுள்ளனர். ஆனால் குமரேசன் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த 3 பேரும், குமரேசனை இரும்புகம்பியால் அடித்து கொலை செய்து விட்டு, அவரிடம் இருந்து ரூ.1,500 மற்றும் அவருடைய செல்போனையும் எடுத்துக்கொண்டு தப்பிச்சென்று விட்டனர். இந்த நிலையில் 3 பேரும் போலீசில் சிக்கிக்கொண்டனர் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த கொலை வழக்கில் திறமையாக செயல்பட்ட தனிப்படை போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி பாராட்டு தெரிவித்தார்.

Related Tags :
Next Story