இமானுவேல் சேகரன் படம் அவமதிப்பு கண்டித்து புதிய தமிழகம் கட்சியினர் மறியல்
அன்னவாசல் அருகே இமானுவேல் சேகரன் படத்திற்கு மர்ம நபர்கள் அவமதிப்பு செய்ததை கண்டித்து புதிய தமிழகம் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அன்னவாசல்,
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள புல்வயல் கிராமத்தில் புதிய தமிழகம் கட்சி சார்பில் கொடிக் கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு கீழே இமானுவேல் சேகரன் மற்றும் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோரின் படங்கள் இடம் பெற்ற விளம்பர பதாகை வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் நேற்று அதிகாலை இமானுவேல் சேகரன் படத்திற்கு மர்மநபர்கள் 3 செருப்புகள் மற்றும் மதுபாட்டிலை மாலையாக கட்டி தொங்க விட்டு அவமதிப்பு செய்திருந்தனர்.
இதனை பார்த்த புதிய தமிழகம் கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர். இந்த தகவல் அந்த பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது. அடுத்த ஒரு சில நிமிடங்களில் அந்த பகுதியில் புதிய தமிழகம் கட்சியினர் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து இமானுவேல் சேகரன் படத்தை அவமதித்த மர்ம நபர்களை கைது செய்யக்கோரி புல்வயலில் புதுக்கோட்டை-குடுமியான்மலை சாலையில் அமர்ந்து புதிய தமிழகம் கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன.
இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் சம்பவ இடத்திற்கு வந்தார். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடனடியாக இமானுவேல் சேகரன் படத்தை அவமதித்த மர்ம நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார். இதில் உடன்பாடு ஏற்பட்டது.
இதையடுத்து அந்த விளம்பர பதாகைக்கு புதிய தமிழகம் கட்சியினர் பாலாபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் அந்த பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் இலுப்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கோபாலசந்திரன், அன்னவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

Related Tags :
Next Story