வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்


வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 8 Oct 2018 4:30 AM IST (Updated: 8 Oct 2018 2:16 AM IST)
t-max-icont-min-icon

வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை,

கலெக்டர் கந்தசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

திருவண்ணாமலை மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். இதற்கு பள்ளி இறுதி வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் தேர்ச்சி பெறாதவர்கள், மேல்நிலைக்கல்வி தேர்ச்சி, பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து தொடர்ந்து பதிவினை புதுப்பித்து வருபவர்கள், கடந்த செப்டம்பர் மாதம் 30-ந் தேதியின் நிலவரப்படி 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்பவராக இருத்தல் வேண்டும். மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடித்திருக்க வேண்டும்.

தகுதி உள்ளவர்கள் திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெறப்பட்ட விண்ணப்ப படிவத்திலோ அல்லது வேலைவாய்ப்புத்துறை இணையதளத்தின் மூலம் எடுக்கப்பட்ட விண்ணப்ப படிவத்திலோ அல்லது நகல் விண்ணப்ப படிவத்திலோ பூர்த்தி செய்து வருவாய் ஆய்வாளர் அல்லது உயர் அலுவலரிடம் இருந்து பெறப்பட்ட சான்று, தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்குப் புத்தகத்துடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அடுத்த மாதம் (நவம்பர்) 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story