பாரதீய ஜனதா ஆட்சியை அகற்ற 2-வது சுதந்திர போராட்டத்திற்கு தயார் புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி பேச்சு
பாரதீய ஜனதா ஆட்சியை அகற்ற நடைபெறும் 2-வது சுதந்திர போராட்டத்திற்கு அனைவரும் தயாராக இருக்க வேண்டும் என்று திருச்சியில் நடந்த மனிதநேய மக்கள் கட்சி மாநாட்டில் புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசினார்.
திருச்சி,
மனிதநேய மக்கள் கட்சி சார்பில் திருச்சி விமான நிலையம் அருகில் அரசமைப்பு சட்ட பாதுகாப்பு மாநாடு நேற்று நடைபெற்றது. மாநாட்டுக்கு மாநில தலைவர் ஜவாஹிருல்லா தலைமை தாங்கி பேசினார். த.மு.மு.க. பொதுச்செயலாளர் ஹைதர் அலி, மனிதநேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் அப்துல் சமது ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினார்கள்.
மேலும் அரசியல் கட்சி தலைவர்களும் கலந்து கொண்டு பேசினர். மாநாட்டில் புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-
சமத்துவம், சகோதரத்துவம், தனிமனித சுதந்திரம் இதுதான் நமது மூச்சுக்காற்று. மோடி ஆட்சிக்கு வந்தபின் ஆர்.எஸ்.எஸ். சொல்வதைத்தான் செய்து வருகிறார். சிறுபான்மை சமுதாயம் பாதுகாக்கப்படும் என்று கூறிதான் மோடி ஆட்சிக்கு வந்தார். ஆனால், இன்று இந்துக்கள் தவிர மற்ற சமுதாயத்தினருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகி விட்டது.
காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை ஆட்சி முக்கியமல்ல. மக்கள் பாதுகாப்புதான் முக்கியம். சிறுபான்மையினர் திட்டமிட்டு நசுக்கப்பட்டு வருகிறார்கள். இதற்கெல்லாம் விடிவுகாலம் பிறக்க இன்னும் 6 மாதமே உள்ளது. மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கட்சியின் நரேந்திரமோடியின் ஆட்சி தூக்கி எறியப்பட வேண்டும். வெள்ளையனை எதிர்த்த முதல் சுதந்திர போராட்டம் முடிந்துவிட்டது. பாசிச பாரதீய ஜனதா கட்சியின் அரசை அகற்ற இனி நடப்பது 2-வது சுதந்திர போராட்டம். அதற்கு எல்லோரும் தயாராக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசுகையில், “தமிழகத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கிற சக்தியாக உள்ள தி.மு.க. தலைமையிலான அரசு அமைய வேண்டும். ஆளுகிற அரசு சிறுபான்மை மக்களை பாதுகாப்பது ஜனநாயக கடமை. ஆனால், அவர்கள் நசுக்கப்படுகிறார்கள். பாரதீய ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வர துடிக்கிறது. தமிழக அடிமை அரசுக்கு அதற்கு எடுபிடி வேலை செய்கிறது. எனவே, இரு அரசுகளும் தூக்கி எறியப்பட வேண்டும். வரப்போகிற தேர்தலில் மோடியின் கூட்டம் தோற்கடிக்கப்பட வேண்டும். அது தெற்கில் இருந்து தொடங்கப்பட வேண்டும்” என்றார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் பேசுகையில், “இன்னும் 6 மாதத்தில் தேர்தல் நடக்க உள்ளது. பாராளுமன்றத்தில் மனிதநேய மக்கள் கட்சி சார்பிலும் குரலை ஒலிக்க செய்திட வேண்டும். நாட்டில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக செயல்படும் மோடி மற்றும் பினாமி அரசான எடப்பாடி பழனிசாமி அரசு தூக்கி எறியப்பட வேண்டும்” என்றார்.
திராவிடர் கழக தலைவர் வீரமணி பேசுகையில், “ஆர்.எஸ்.எஸ். என்ற ‘செல்’ இந்திய அரசியல் சட்டத்தை அரித்து கொண்டு இருக்கிறது. மதசார்பின்மைக்கு மோடி ஆட்சியில் இடம் இல்லை. மனுதர்மம் அடிப்படையில் தான் ஆட்சி நடக்கிறது. மனிதநேயம் செத்துப்போய் விட்டது. இட ஒதுக்கீடு, சமூகநீதி, ஜனநாயகம் என்றென்றும் போற்றி பாதுகாக்கப்பட வேண்டும். இந்த மாநாடு தேவையான நேரத்தில் தேவையான எச்சரிக்கை கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது” என்றார்.
தொடர்ந்து தி.மு.க. மாநில துணை பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி, திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் நேரு எம்.எல்.ஏ., இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தேசிய தலைவர் காதர்மொய்தீன் உள்பட பலர் பங்கேற்று பேசினார்கள்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
மக்களாட்சியை வலுப்படுத்த வாக்களிக்கும் முறையை மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்கு மாற்ற வேண்டும். சட்டம் இயற்றும் அவைகளில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். முஸ்லிம்களுக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும். மத்திய அரசு கொண்டு வந்துள்ள முத்தலாக் அவசர சட்டத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்து காவிரி படுகை பகுதியை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும். மத உரிமைகளில் தலையிடும் வகையிலும், ஒழுக்க மாண்புகளை சீர் குலைக்கும் வகையிலும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் வழங்கப்படுவது ஆரோக்கியமானது அல்ல என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக நேற்று காலை மாநாட்டு திடலில் மாணவர் அமைப்பு சார்பில் கருத்தரங்கமும், அதனை தொடர்ந்து சமுதாய அரங்கம் நிகழ்ச்சியும் நடந்தது. மாலையில் இளைஞர் அணியினர் மாநாட்டு திடல் அருகில் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

Related Tags :
Next Story