மருவத்தூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மர்ம காய்ச்சலால் பாதிப்பு
மருவத்தூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
செந்துறை,
அரியலூர் மாவட்டம் செந்துறையை அடுத்துள்ள மருவத்தூர் ஊராட்சியில் மருவத்தூர், சேடக்குடிக்காடு, விழுப்பணங்குறிச்சி மற்றும் பாசாளம் ஆகிய கிராமங்கள் உள்ளன. சேடக்குடிக்காடு கிராமத்தை தொடர்ந்து மருவத்தூர் ஊராட்சி முழுவதும் ஒரு மாத காலமாக மர்ம காய்ச்சல் நீடித்து வருகிறது.
இதனால் ஊராட்சி நிர்வாகம் மருவத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கிராமங்களில் தூய்மை பணி மேற்கொள்வதுடன், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுத்தம் செய்து வருகின்றனர். சுகாதாரதுறையினர் வீடு, வீடாக சென்று காய்ச்சல் உள்ளவர்களை கண்டறிந்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வருகின்றனர்.
இந்தநிலையில் மருவத்தூர் காலனி தெருவை சேர்ந்த ராஜா மனைவி விருத்தம்பாள்(வயது 29) மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது மகன்கள் விக்னேஷ் (12), தமிழ்வாணன்(8), விஜய் (7) ஆகியோரும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் செந்துறையில் உள்ள தனியர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஊராட்சி நிர்வாகம் மற்றும் சுகாதார துறை இணைந்து நடவடிக்கை எடுத்தும் மர்ம காய்ச்சல் பரவி வருவது அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story