அனைத்து மேல்நிலைப்பள்ளிகளிலும் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் தொடங்க கோரிக்கை
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர்கள், அனைத்து மேல்நிலைப்பள்ளிகளிலும் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் தொடங்க கோரிக்கை வைத்துள்ளார்கள்.
பெரம்பலூர்,
பெரம்பலூரில், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டமும், நல்லாசிரியர் விருதுபெற்ற செட்டிக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியரும், ஜூனியர் ரெட்கிராஸ் மாவட்ட அமைப்பாளருமான ராதாகிருஷ்ணனுக்கு பாராட்டு விழாவும் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ரோச் தனசாமி தலைமை தாங்கினார். செயலாளர் ராஜேந்திரன் வரவேற்றார். சங்கத்தின் நிறுவனத்தலைவர் நல்லப்பன், மாநிலத்தலைவர் வரதன், பொதுச்செயலாளர் நேரு, அமைப்பு செயலாளர் நாகராஜன், பிரசார செயலாளர் செல்வராஜ் உள்பட பலர் வாழ்த்தி பேசினர்.
கூட்டத்தில், அரசாணை எண் 194 மற்றும் 306-ஐ வெளியிட்ட தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்வது, சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட 271 பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். மேல்படிப்பில் மாற்று பாடத்தில் பட்டம் பெற்றவர்களுக்கு 2 சதவீத ஊக்க ஊதியம் வழங்க வேண்டும். அனைத்து மேல்நிலைப்பள்ளிகளிலும் தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை தொடங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாவட்ட பொருளாளர் மருதராஜ் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story