விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பல்வேரு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
விருதுநகர்,
தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் உரவிலையை கட்டுப்படுத்த கோரியும் விவசாய கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும் நீர்நிலைகளை தூர்வாரக்கோரியும் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
வட்டார தலைவர் ராமச்சந்திரன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில குழு உறுப்பினர் வக்கீல் சீனிவாசன், நகர செயலாளர் காதர் முகைதீன், மாவட்ட குழு உறுப்பினர்கள் பழனிகுமார், முருகேசன் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதே போன்று வத்திராயிருப்பிலும் விவசாய சங்க தாலுகா செயலாளர் சவுந்தரபாண்டியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Related Tags :
Next Story