பயிர்க்கடன் பெற சிட்டா வழங்க மறுப்பு: அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
பயிர்க்கடன் பெற சிட்டா வழங்க மறுப்பு தெரிவித்து வரும் அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் மன்னார்குடியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சுந்தரக்கோட்டை,
கோவில்கள், அறக்கட்டளைக்கு சொந்தமான விவசாய நிலங்களை பல தலை முறையாக குத்தகைக்கு எடுத்து சாகுபடி செய்து வரும் விவசாயிகள் பயிர்க்காப்பீடு செய்யவும், வங்கிகளில் பயிர்க்கடன் பெறவும் சிட்டா, அடங்கல் உள்ளிட்ட ஆவணங்களை வழங்க மறுப்பு தெரிவித்து வரும் வருவாய்த்துறை மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகளை கண்டித்தும் மன்னார்குடி தாசில்தார் அலுவலகம் முன்பு நேற்று விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு விவசாய சங்கத்தின் கோட்டூர் ஒன்றியம் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் கோட்டூர் ஒன்றிய தலைவர் அறிவுடைநம்பி தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சிவபுண்ணியம் கலந்துகொண்டு பேசினார்.
இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி கோட்டூர் ஒன்றிய செயலாளர் மாரிமுத்து, துணை செயலாளர் செந்தில்நாதன், கோட்டூர் முன்னாள் ஒன்றியக்குழு துணை தலைவர் தங்கையன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய பொருளாளர் ஜெயராமன், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் பரந்தாமன், பொருளாளர் முருகேசன் மற்றும் பலர் கலந்து கொண்டு பயிர்க்கடன் பெறுவதற்கு சிட்டா, அடங்கல் உள்ளிட்ட ஆவணங்களை வழங்கக்கோரி கோஷங்களை எழுப்பினர்.
Related Tags :
Next Story