நடிகைக்கு எதிராக வீடியோ சித்தரித்து வெளியீடு நடிகர் அக்சய்குமார் போலீசில் புகாா்


நடிகைக்கு எதிராக வீடியோ சித்தரித்து வெளியீடு நடிகர் அக்சய்குமார் போலீசில் புகாா்
x
தினத்தந்தி 8 Oct 2018 10:56 PM GMT (Updated: 2018-10-09T04:26:59+05:30)

தனது வீடியோவை யாரோ சித்தரித்து வெளியிட்டுள்ளதாக நடிகர் அக்சய்குமார் போலீசில் புகார் அளித்து உள்ளார்.

மும்பை,

‘ரெய்டு’ உள்ளிட்ட பல இந்தி படங்களில் நடித்து இருப்பவர் பிரபல நடிகர் அக்சய்குமார். தற்போது ரஜினிகாந்த் நடித்து சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 2.0 படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகை தனுஸ்ரீ தத்தா, நடிகர் நானாபடேகருக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டை தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் நடிகர் அக்சய்குமார், தனுஸ்ரீதத்தாவிற்கு எதிரான கருத்தை கூறியது போல சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று பரவியது.

இது குறித்து நடிகர் அக்சய்குமார் பாந்திரா சைபர் குற்றப்பிரிவு போலீசில் புகார் ஒன்றை அளித்து உள்ளார். அந்த புகாரில், தான் சமீபத்தில் டி.வி.க்கு அளித்த பேட்டியை தனுஸ்ரீ தத்தாவிற்கு எதிராக கருத்து கூறியது போல சித்தரித்து யாரோ வீடியோ வெளியிட்டுள்ளனர். அதை வெளியிட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இந்த புகார் குறித்து பாந்திரா குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், சித்தரித்து வெளியிடப்பட்ட அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் தேடி வருகிறோம். அந்த வீடியோ ஏற்கனவே சமூக வலைதளத்தில் இருந்து அகற்றப்பட்டு இருக்கலாம் என நினைக்கிறோம். எனவே நடிகர் அக்சய்குமாரிடம் அந்த வீடியோ நகலை கேட்டுள்ளோம். தொடர்ந்து இது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story