டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்ட பகுதியில் மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் ஆய்வு


டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்ட பகுதியில் மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் ஆய்வு
x
தினத்தந்தி 10 Oct 2018 4:15 AM IST (Updated: 9 Oct 2018 7:24 PM IST)
t-max-icont-min-icon

அந்தியூர் அருகே உள்ள பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்ட பகுதியில் மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் ஆய்வு செய்தார்.

அந்தியூர்,

அந்தியூர் அருகே உள்ள மைக்கேல்பாளையம், இந்திரா நகர், சம்த்துவபுரம், சங்கராப்பாளையம், காக்காயனூர் உள்பட பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சலால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

 காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அனைவரும் அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் அந்தப்பகுதிகளில் மருத்துவ முகாமும் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் பாலகணேஷ் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

 அப்போது அவர் அந்தப்பகுதியில் உள்ள குடிநீர் தொட்டிகள் மற்றும் கழிவுநீர் தேங்கியுள்ள பகுதிகளை பார்வையிட்டார். மேலும் பொதுமக்களிடம், வீடுகளில் கழிவுநீர் தேங்காதை வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும். அதிகாரிகளிடம் அனைத்து கிராமப்பகுதிகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதைத்தொடர்ந்து அப்பகுதியில் உள்ள மாணவ–மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

இந்த ஆய்வின்போது, அந்தியூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சக்திவேல். அந்தியூர் வட்டார மருத்துவ அதிகாரி மோகனம்பாள் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story