கேரளாவுக்கு கடத்த முயன்ற 1 டன் ரே‌ஷன் அரிசி பறிமுதல்


கேரளாவுக்கு கடத்த முயன்ற 1 டன் ரே‌ஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 10 Oct 2018 4:15 AM IST (Updated: 9 Oct 2018 8:25 PM IST)
t-max-icont-min-icon

குளச்சலில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 1 டன் ரே‌ஷன் அரிசியை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

குளச்சல்,

குளச்சலில் இருந்து கேரளாவுக்கு ரே‌ஷன் அரிசி கடத்துவதாக பறக்கும்படை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பறக்கும்படை தனி தாசில்தார் ராஜசேகர், துணை தாசில்தார் முருகன், வருவாய் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் குளச்சல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

 அப்போது மரமடி என்னும் இடத்தில் ஒரு சொகுசு காரும், அதன் அருகே ஒரு ஆட்டோவும் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தன. அவற்றின் அருகே சென்ற அதிகாரிகள் சந்தேகத்தின்பேரில் காரை சோதனையிட்டனர். அப்போது, காரில் சிறு சிறு மூடைகளில் 700 கிலோ ரே‌ஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து, ஆட்டோவை சோதனையிட்ட போது அதில் 300 கிலோ ரே‌ஷன் அரிசி இருந்தது.

விசாரணையில் இந்த அரிசி கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து கார் மற்றும் ஆட்டோவுடன் ரே‌ஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

மேலும், கடத்தலின் போது பாதுகாப்பு பணியில் ஈடுபட பயன்படுத்திய ஒரு மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட 1 டன் அரிசியை காப்புக்காடு அரசு குடோனிலும், வாகனங்களை கல்குளம் தாலுகா அலுவலகத்திலும் ஒப்படைத்தனர்.

இதனை கடத்த முயன்றது யார்? என்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story