குன்னூர்– மேட்டுப்பாளையம் சாலையில் தாறுமாறாக ஓடிய போலீஸ் வேன் சுவரில் மோதியது; 2 பேர் காயம்
குன்னூர்– மேட்டுப்பாளையம் சாலையில் தாறுமாறாக ஓடிய போலீஸ் வேன் சுவரில் மோதி நின்றது. இதில் 2 பேர் காயம் அடைந்தனர்.
குன்னூர்,
குன்னூர்– மேட்டுப்பாளையம் சாலையில் கே.என்.ஆர். நகர் அருகே சென்றபோது திடீரென வேனின் முன்பகுதியில் இருந்து புகை வந்தது. மேலும் பிரேக் பிடிக்காமல் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக ஓடியது. தொடர்ந்து சாலையோரத்தில் இருந்த ஒரு சுவரில் மோதி நின்றது. அதில் இன்ஸ்பெக்டர் சந்திரபோஸ், டிரைவர் சிவக்குமார் ஆகியோர் காயம் அடைந்தனர். மேலும் வேனின் முன்பகுதியும் சேதம் அடைந்தது. உடனே சக போலீசார் காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா, குன்னூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் விபத்து நடந்த இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர். விபத்து குறித்து வெலிங்டன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.