விவசாய கடன் தள்ளுபடியை அடுத்து ஆதிதிராவிட மாணவர்களின் கல்வி கடன் ரத்து முதல்-மந்திரி குமாரசாமி திட்டம்


விவசாய கடன் தள்ளுபடியை அடுத்து ஆதிதிராவிட மாணவர்களின் கல்வி கடன் ரத்து முதல்-மந்திரி குமாரசாமி திட்டம்
x
தினத்தந்தி 10 Oct 2018 4:45 AM IST (Updated: 9 Oct 2018 10:52 PM IST)
t-max-icont-min-icon

விவசாய கடன் தள்ளுபடியை அடுத்து, ஆதிதிராவிடமாணவர்களின் கல்விக்கடனை ரத்து செய்ய முதல்-மந்திரிகுமாரசாமி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பெங்களூரு,

கர்நாடகத்தில் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. ரூ.45 ஆயிரம் கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்வதாக குமாரசாமி ஏற்கனவே அறிவித்தார். கடன் தள்ளுபடி பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்த மாணவர்களின் கல்வி கடனை ரத்து செய்ய வேண்டும் என்று அந்த சமூகங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. அந்த கோரிக்கையை நிறைவேற்றுவது குறித்து குமாரசாமி ஆலோசனை நடத்த தொடங்கி இருக்கிறார்.

கர்நாடகத்தில் உள்ள வங்கிகளில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்த மாணவர்களின் கல்வி கடன் எவ்வளவு உள்ளது என்பது குறித்து அறிக்கை வழங்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு குமார சாமி உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் நிதியில் சுமார் ரூ.20 ஆயிரம் கோடி அளவுக்கு இருப்பில் உள்ளதாகவும், அந்த நிதியை பயன்படுத்தி கல்வி கடனை தள்ளுபடி செய்ய குமாரசாமி முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Next Story