கடையின் பூட்டை உடைத்து ரூ.1½ லட்சம், பேட்டரிகள் திருட்டு போலீசார் விசாரணை


கடையின் பூட்டை உடைத்து ரூ.1½ லட்சம், பேட்டரிகள் திருட்டு போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 10 Oct 2018 4:30 AM IST (Updated: 9 Oct 2018 11:01 PM IST)
t-max-icont-min-icon

மணப்பாறை அருகே கடையின் பூட்டை உடைத்து ரூ.1½ லட்சம் மற்றும் பேட்டரிகள் திருடப்பட்டது. கண்காணிப்பு கேமராவில் பதிவான மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மணப்பாறை,

மணப்பாறையை அடுத்த பன்னாங்கொம்பை சேர்ந்தவர் ராம்குமார்(வயது 32). இவர், மணப்பாறை அருகே பொத்தமேட்டுப்பட்டி பகுதியில் கார், லாரி போன்ற வாகனங்களுக்கு பயன்படுத்தும் பேட்டரிகள் மற்றும் வீடுகளில் பயன்படுத்தும் இன்வெர்ட்டருடன் கூடிய பேட்டரி கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் வியாபாரத்தை முடித்து விட்டு நேற்று முன்தினம் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று காலை அவரது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு பாதி திறந்து இருந்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து ராம்குமாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், ராம்குமார் கடைக்கு விரைந்து வந்து பார்த்தபோது அங்கு பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சத்து 47 ஆயிரம் ரொக்கம் திருட்டு போயிருந்தது. மேலும், ரூ.1 லட்சம் மதிப்பிலான பேட்டரிகளும் திருட்டு போயிருந்தன. இதுகுறித்து மணப்பாறை போலீசாருக்கு ராம்குமார் கொடுத்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு போலீசார் வந்து விசாரணை நடத்தினர்.

மேலும், கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தபோது அதில், 2 மர்ம நபர்கள் முகத்தில் துணியை கட்டிக் கொண்டு கடையின் உள்ளே நிற்பதும், பின்னர் பீரோவில் இருந்த பணத்தை எடுப்பதும் பதிவாகி இருந்தது.அந்த காட்சிகளின் அடிப்படையில் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story