பிறந்து 4 நாட்களே ஆன குழந்தையை வேறு பெண்ணிடம் கொடுத்து விட்டு தப்பி ஓடிய தாய்
பிறந்து 4 நாட்களே ஆன குழந்தையை வேறு பெண்ணிடம் கொடுத்து விட்டு தப்பி ஓடிய தாயை போலீசார் தேடி வருகின்றனர்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் பஸ் நிலையத்தில் பிறந்து 4 நாட்களே ஆன குழந்தையுடன் பெண் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அந்த பெண் அங்கு நின்று கொண்டிருந்த பெண்ணிடம், இந்த குழந்தையை பார்த்துகொள்ளுங்கள், நான் கழிவறை சென்று விட்டு வருகிறேன் ’ என்று கூறிவிட்டு சென்றார். ஆனால் வெகு நேரமாகியும், அந்த பெண் திரும்பி வரவில்லை.
குழந்தையை பார்த்து கொள்ளும்படி கூறி விட்டு சென்ற பெண் யார்? என்பது தெரியவில்லை. குழந்தை ஒப்படைக்கப்பட்ட பெண் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் வேலை செய்து வரும் நர்ஸ் ஜெயலட்சுமி என்பது தெரியவந்தது.
இதையடுத்து ஜெயலட்சுமி, பிறந்து 4 நாட்களே ஆன அந்த ஆண் குழந்தையை காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள குழந்தைகள் வார்டில் அனுமதித்தார்.
குழந்தையை கொடுத்து விட்டு சென்ற அந்த தாய் யார் என்பது குறித்து காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு எம்.பாலசுப்பிரமணியன் மேற்பார்வையில், பெரிய காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி விசாரணை நடத்தி வருகிறார். விசாரணையில் அந்த குழந்தை காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தை என்பது தெரியவந்தது. அதை வைத்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story