வரதட்சணை கேட்டு பெண்ணை எரித்துக்கொல்ல முயற்சி கணவர் குடும்பத்தினர் மீது போலீசில் புகார்


வரதட்சணை கேட்டு பெண்ணை எரித்துக்கொல்ல முயற்சி கணவர் குடும்பத்தினர் மீது போலீசில் புகார்
x
தினத்தந்தி 10 Oct 2018 4:45 AM IST (Updated: 10 Oct 2018 12:36 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் அருகே வரதட்சணை கேட்டு பெண்ணை எரித்துக்கொல்ல முயன்றதாக கணவர் குடும்பத்தினர் மீது பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருவாரூர்,

திருவாரூர் வாசன் நகரை சேர்ந்தவர் கிஷோர்(வயது 28). இவர், காட்டூரில் ஒரு வாட்டர் சர்வீஸ் கம்பெனி நடத்தி வருகிறார். இவருக்கும், மன்னார்குடியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகள் ஜெயநந்தினி(23) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இவர்களுக்கு 1½ வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் ஜெயநந்தினி காயங்களுடன் குழந்தை ஹரேந்திராவுடன் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து ஜெயநந்தினி திருவாரூர் டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரில், தனது கணவன் கிஷோர், தன்னிடம் வரதட்சணை கேட்டு அடிக்கடி தகராறு செய்ததாகவும் சம்பவத்தன்று கூடுதல் வரதட்சணை கேட்டு தன்னை(ஜெயநந்தினி) தனது கணவர் கிஷோர் மற்றும் அவரது குடும்பத்தினர் அரிவாளால் வெட்டி மண்எண்ணெய் ஊற்றி எரித்துக்கொல்ல முயன்ற தாகவும் அவர்களிடம் இருந்து தான் தப்பி வந்து மருத்துவமனையில் சிகிச்சைக் காக சேர்ந்ததாகவும் கூறியுள்ளார்.

இந்த புகாரின் பேரில் திருவாரூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story