அயோத்தியில் ராமர் கோவில் கட்டாவிட்டால் பா.ஜனதா ஆட்சியை இழக்கும் சிவசேனா சொல்கிறது


அயோத்தியில் ராமர் கோவில் கட்டாவிட்டால் பா.ஜனதா ஆட்சியை இழக்கும் சிவசேனா சொல்கிறது
x
தினத்தந்தி 10 Oct 2018 4:00 AM IST (Updated: 10 Oct 2018 2:03 AM IST)
t-max-icont-min-icon

அயோத்தியில் ராமர் கோவில் கட்டாவிட்டால் பா.ஜனதா ஆட்சியை இழக்கும் என்று சிவசேனா கூறியுள்ளது.

மும்பை,

மத்தியிலும், மராட்டியத்திலும் பா.ஜனதா ஆட்சியில் சிவசேனா அங்கம் வகிக்கிறது. ஆனாலும் பா.ஜனதாவை ஏதாவது ஒரு விஷயத்தை முன்வைத்து வசைப்பாடி வந்த சிவசேனா தற்போது ராமர் கோவில் விவகாரத்தை தீவிரமாக கையில் எடுத்துள்ளது.

இதுகுறித்து சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘சாம்னா’வில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நாடாளுமன்ற தேர்தலின்போது உத்தரபிரதேசத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் என்று பா.ஜனதா வாக்குறுதி அளித்தது. ஆனால், அதை நிறைவேற்றுவதில் தோல்வி அடைந்து விட்டது.

உத்தரபிரதேச மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்று விட்டால், ராமர் கோவில் சுலபமாக கட்டப்பட்டு விடும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் ராமர் ேகாவில் விவகாரம் குறித்து பேசுபவர்களை ஆளும் கட்சி துன்புறுத்துகிறது. 30 ஆண்டுகளுக்கு முன்பு ராமர் பக்தர்கள் அதிகளவில் போலீஸ் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டனர் என்பதை நினைவுக்கூர வேண்டி உள்ளது.

பா.ஜனதாவுக்கு மக்கள் முழு ஆதரவு கொடுத்து அரியணையில் அமர்த்தினர். அக்கட்சிக்கு ராமர் நல்ல நாட்களை கொடுத்தார். ஆனால் கடவுளான ராமரையே பா.ஜனதா வெளியில் தான் நிறுத்தி உள்ளது.

முத்தலாக், எஸ்.சி. எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டம் போன்ற விஷயங்களில் கோர்ட்டு முடிவுகளை புறந்தள்ளி மத்திய பா.ஜனதா அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. ஆனால் ராமர்கோவில் கட்டுவதற்கு ஏன் அவசர சட்டத்தை ெகாண்டு வர முடியவில்லை.

தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில் அயோத்தியில் ராமர்ேகாவிலை கட்ட பா.ஜனதா முன்வர வேண்டும். இல்லாவிட்டால் பா.ஜனதா ஒரு ‘பொய்யர்’ கட்சி என்ற பெயரை சம்பாதிக்கும். மேலும் ஆட்சி அதிகாரத்தையும் இழக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story