மாவட்ட செய்திகள்

சத்தியமங்கலம் தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் திடீர் முற்றுகை + "||" + Public Siege of Sathiyamangalam Taluk Office

சத்தியமங்கலம் தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் திடீர் முற்றுகை

சத்தியமங்கலம் தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் திடீர் முற்றுகை
சத்தியமங்கலம் தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் திடீர் முற்றுகையிட்டனர்.

சத்தியமங்கலம்,

சத்தியமங்கலம் சுற்றுப்புறத்தில் உள்ள கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள் நேற்று பகல் 11.30 மணி அளவில் சத்தியமங்கலம் தாலுகா அலுவலகம் முன்பு திரண்டனர். பின்னர் அலுவலகத்தை முற்றுகையிட்டார்கள். இதில் பவானிசாகர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. பி.எல்.சுந்தரம், மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொறுப்பாளர்கள் மோகன்குமார், ஸ்டாலின் சிவக்குமார், சுடர் நடராஜ், சரவணன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் தாசில்தார் கார்த்திக் அங்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பொதுமக்கள் கூறியதாவது:–

சத்தியமங்கலம், குத்தியாலத்தூர், அரசூர், பவானிசாகர், புஞ்சைபுளியம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு வீட்டுமனை பட்டா கேட்டும், வீடு இல்லாதவர்களுக்கு இடம் கேட்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சத்தியமங்கலம் தாலுகா அலுவலகத்தில் 4 ஆயிரத்து 625 மனுக்கள் கொடுத்தோம். இதில் ஒரு சிலருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படாமலும், பட்டா கொடுத்தும் இடம் காட்டப்படாமலும் உள்ளது. உடனே எங்கள் கோரிக்கைளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

அதற்கு தாசில்தார், ‘உங்கள் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும்’ என்றார். அதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


தொடர்புடைய செய்திகள்

1. பெண்களை கிண்டல் செய்தவர்களை கைது செய்யக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா
இளம் பெண்களை கிண்டல் செய்தவர்களை கைது செய்யக்கோரி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் கீழக்கணவாய் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
2. குமரி மாவட்டத்தில் பரவலாக பெய்த மழை பொதுமக்கள் மகிழ்ச்சி
குமரி மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
3. திட்டச்சேரி அருகே கட்டி முடிக்கப்பட்டு பூட்டிக்கிடக்கும் கிராம சேவை மைய கட்டிடம் திறக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
திட்டச்சேரி அருகே கட்டி முடிக்கப்பட்டு பூட்டிக்கிடக்கும் கிராம சேவை மைய கட்டிடத்தை திறக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
4. தூத்தூர் கிராமத்தில் பரபரப்பு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் பொதுமக்கள் போராட்டம்
தூத்தூர் கிராமத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
5. துறையூர் அருகே 3 கரடிகள் நடமாட்டம்; பொதுமக்கள் அச்சம்
துறையூர் அருகே 3 கரடிகள் நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.