மாவட்ட செய்திகள்

நாகர்கோவிலில் லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் சாவு + "||" + Larry collided with private company employee in Nagercoil

நாகர்கோவிலில் லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் சாவு

நாகர்கோவிலில் லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் சாவு
நாகர்கோவிலில், லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
நாகர்கோவில்,

நாகர்கோவில் அருகே உள்ள அனந்தநாடார் குடியிருப்பு கீழ சங்கரன்குழியை சேர்ந்தவர் தவசிமணி (வயது 49). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். நேற்று மதியம், இவர் ஆசாரிபள்ளத்துக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். ஆசாரிபள்ளம் போலீஸ் நிலையம் அருகே பஸ் நிறுத்தம் முன் மோட்டார் சைக்கிளை திருப்ப முயன்றதாக தெரிகிறது. அப்போது சிமெண்ட் மூடைகளை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்தது. திடீர் என்று எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியது. இதில் தவசிமணி ரோட்டில் தூக்கி வீசப்பட்டார். அப்போது லாரியின் முன் சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.


இதுபற்றிய தகவல் அறிந்த நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு  ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து காரணமாக அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் துரிதமாக செயல்பட்டு போக்குவரத்தை சரிசெய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் லாரி டிரைவரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


தொடர்புடைய செய்திகள்

1. கோமாரிநோய் தாக்கி 7 பசுமாடுகள் சாவு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை
நொச்சிப்பட்டியில் கோமாரி நோய் தாக்கி 7 பசுமாடுகள் இறந்தது. எனவே இறந்தமாடுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2. கஜா புயலால் பருத்தி செடிகள் நாசம்: விஷம் குடித்த விவசாயி சாவு
கஜா புயலின் போது பருத்தி செடிகள் நாசமானதால் மனமுடைந்து விஷம் குடித்த விவசாயி சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
3. மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்: தந்தை-மகள் உடல் நசுங்கி சாவு
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் தந்தை, மகள் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.
4. லாரி மீது மோட்டார்சைக்கிள் மோதல்: பிரியாணி கடைக்காரர் பரிதாப சாவு 2 பேர் படுகாயம்
புதுச்சத்திரம் அருகே லாரி மீது மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் பிரியாணி கடைக்காரர் பரிதாபமாக இறந்தார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
5. குன்னம் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி சாவு மாட்டை காப்பாற்ற முயன்றபோது பரிதாபம்
குன்னம் அருகே மாட்டை காப்பாற்ற முயன்ற விவசாயி மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார்.