மாவட்ட செய்திகள்

கருணாநிதி பெயரில் இருக்கை அமைக்க புதுவை பல்கலைக்கழகம் ஒப்புதல் + "||" + Puthuvai University approved to set up the seat in Karunanidhi

கருணாநிதி பெயரில் இருக்கை அமைக்க புதுவை பல்கலைக்கழகம் ஒப்புதல்

கருணாநிதி பெயரில் இருக்கை அமைக்க புதுவை பல்கலைக்கழகம் ஒப்புதல்
கருணாநிதி பெயரில் இருக்கை அமைக்க புதுவை பல்கலைக்கழகம் ஒப்புதல் அளித்துள்ளதாக முதல்–அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி,

மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியை சிறப்பிக்கும் வகையில் புதுவையில் அவருக்கு முழு உருவ சிலை, காரைக்கால் பைபாஸ் சாலை மற்றும் பட்டமேற்படிப்பு மையத்துக்கு கருணாநிதி பெயர் சூட்டப்படும் என்றும், புதுவை பல்கலைக்கழகத்தில் அவரது பெயரில் இருக்கை ஒன்று அமைக்கப்படும் என்று ஏற்கனவே முதல்–அமைச்சர் நாராயணசாமி அறிவித்திருந்தார்.

இதையொட்டி கருணாநிதி பெயரில் இருக்கை அமைப்பது தொடர்பாக பல்கலைக்கழகத்துக்கு முதல்–அமைச்சர் கடிதம் எழுதி இருந்தார். தற்போது அதற்கு பல்கலைக்கழகம் அனுமதி அளித்துள்ளது.

இதுகுறித்து முதல்–அமைச்சர் நாராயணசாமியின் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

இந்தியாவின் முதுபெரும் அரசியல் தலைவரும், தமிழகத்தின் முதல்–அமைச்சராக 6 முறை பதவி வகித்தவரும் தி.மு.க. தலைவருமான கருணாநிதியின் மறைவினையொட்டி அவரை சிறப்பிக்கும் வகையில் புதுவை பல்கலைக்கழகத்தில் சிறப்பு இருக்கை ஒன்றை அமைக்க முதல்–அமைச்சர் நாராயணசாமி கேட்டுக்கொண்டார்.

அவரின் கோரிக்கையினை ஏற்று புதுவை பல்கலைக்கழகத்தில் ‘டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி இருக்கை’ என்ற பெயரில் சிறப்பு இருக்கை ஒன்றை அமைக்க புதுவை பல்கலைக்கழகம் ஒப்புதல் அளித்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.தொடர்புடைய செய்திகள்

1. கருணாநிதிக்கு இடமில்லை என்றவர்களின் ஆட்சியை விரட்டியடிப்போம் - ஆர்.எஸ்.பாரதி எம்.பி.
கருணாநிதி இறந்த பிறகு அவருக்கு இடமில்லை என்றவர்களின் ஆட்சியை விரட்டியடிப்போம் எனபேரூரில் நடந்த தி.மு.க. பொதுக்கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி பேசினார்.
2. ஜூன் 3–ந்தேதி கருணாநிதியின் பிறந்த நாள் தமிழ் செம்மொழி நாளாக கடைப்பிடிக்கப்படும் - மு.க.ஸ்டாலின்
கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3–ந்தேதி தமிழ் செம்மொழி நாளாக கடைப்பிடிக்கப்படும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துளார்.
3. மதுரையில் அண்ணா பஸ் நிலையம் அருகே கருணாநிதிக்கு சிலை - மு.க.அழகிரி
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சிலையை மதுரையில் அமைக்க வேண்டும் என கலெக்டர், மாநகராட்சி ஆணையாளரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளதாக மு.க.அழகிரி கூறியுள்ளார்.
4. ராஜீவ்காந்தி சிலை முதல் இந்திராகாந்தி சிலை வரை உள்ள சாலைக்கு கருணாநிதியின் பெயர் சூட்டப்படும் - நாராயணசாமி
ராஜீவ்காந்தி சிலை முதல் இந்திராகாந்தி சிலை வரை உள்ள சாலைக்கு கருணாநிதியின் பெயர் சூட்டப்படும் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
5. மதுரையில் கருணாநிதிக்கு சிலை அமைக்க அனுமதிக்க வேண்டும்: மாநகராட்சி கமி‌ஷனரிடம், அழகிரி சார்பில் மனு
மதுரையில் கருணாநிதிக்கு வெண்கல சிலை அமைக்க அனுமதிக்க வேண்டும் என்று மு.க.அழகிரி சார்பில் அவருடைய ஆதரவாளர்கள் மாநகராட்சி கமி‌ஷனரிடம் மனு கொடுத்தனர்.