மாவட்ட செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் ரூ.80 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற 4 பேர் சிக்கினர் + "||" + 80 lakhs of foreign money seized at Chennai Airport

சென்னை விமான நிலையத்தில் ரூ.80 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற 4 பேர் சிக்கினர்

சென்னை விமான நிலையத்தில் ரூ.80 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற 4 பேர் சிக்கினர்
சென்னை விமான நிலையத்தில் ரூ.80 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணத்தை சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற 4 பேரிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானத்தில் வெளிநாட்டு பணம் கடத்தப்பட இருப்பதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சிங்கப்பூர் செல்லும் விமானத்தில் சென்னையை சேர்ந்த 4 பேர் பயணம் செய்ய வந்தனர். 4 பேரும் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவர்களின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

4 பேர் சிக்கினர்

அப்போது துணிகளுக்கு இடையே அமெரிக்க டாலர்கள், ஐரோப்பிய யூரோ ஆகிய வெளிநாட்டு பணம் கட்டுக்கட்டாக மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். 4 பேரிடம் இருந்து ரூ.80 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து 4 பேரின் விமான பயணத்தை ரத்து செய்த அதிகாரிகள், 4 பேரும் யாருக்காக வெளிநாட்டு பணத்தை கடத்த திட்டமிட்டு இருந்தனர் என்று விசாரித்தனர். மேலும் பறிமுதலானது ஹவாலா பணமா? என்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.