சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக அய்யப்ப சரண கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம்


சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக அய்யப்ப சரண கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 Oct 2018 10:45 PM GMT (Updated: 10 Oct 2018 9:49 PM GMT)

திருச்சி சத்திரம் பஸ் நிலையம் பகுதியில் ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி, பாரதீய ஜனதா கட்சி உள்ளிட்டவை சார்பில் நேற்று நூதன முறையில் அய்யப்பன் பக்தி பாடல்களை பாடியும், சரண கோஷம் எழுப்பியும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மலைக்கோட்டை,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் பாரம்பரியத்தை காக்க தவறி, 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்களும் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை திரும்பப் பெறக் கோரியும், இந்த தீர்ப்புக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் திருச்சி சத்திரம் பஸ் நிலையம் பகுதியில் ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி, பாரதீய ஜனதா கட்சி உள்ளிட்டவை சார்பில் நேற்று நூதன முறையில் அய்யப்பன் பக்தி பாடல்களை பாடியும், சரண கோஷம் எழுப்பியும் ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆர்.எஸ்.எஸ். மாவட்டத் தலைவர் செல்லத்துரை தலைமை தாங்கினார். இதில் செயலாளர் செல்வம், நிர்வாகிகள் தங்க.ராஜையன், எஸ். பி. சரவணன், இல.கண்ணன், நடராஜன், ராஜசேகரன், சிட்டிபாபு, பாண்டியன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக இந்த அமைப்பினர் சாலைமறியலில் ஈடுபட உள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற பகுதியில் கோட்டை சரக போலீஸ் உதவி கமிஷனர்கள் கோடிலிங்கம், பெரியண்ணன் ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story