சிதம்பரத்தில் : மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சாவு


சிதம்பரத்தில் : மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சாவு
x
தினத்தந்தி 11 Oct 2018 3:33 AM IST (Updated: 11 Oct 2018 3:33 AM IST)
t-max-icont-min-icon

சிதம்பரத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சிதம்பரம், 

சிதம்பரம் அனந்தீஸ்வரர் கோவில் தெருவை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம் மகன் ராஜேஷ்குமார் (வயது 27). சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் மருந்து வாங்குவதற்காக கடைத்தெருவுக்கு வந்து கொண்டிருந்தார். கூத்தாடு பிள்ளையார்கோவில் அருகே சென்ற போது சாலையில் கிடந்த கல் மீது மோட்டார் சைக்கிள் ஏறி, இறங்கியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த ராஜேஷ்குமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ராஜேஷ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கல்யாணசுந்தரம் சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story