ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் அரசு ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்


ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் அரசு ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 Oct 2018 4:25 AM IST (Updated: 11 Oct 2018 4:25 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் அரசு அனைத்து ஓய்வூதியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை, 

அரசு ஊழியர்களுக்கு புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய பென்சன் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தை மின்சார வாரியம், போக்குவரத்து, சென்னை குடிநீர் வாரியம் ஆகிய துறைகளுக்கும் அமல்படுத்த வேண்டும். 2017-ம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கு பின்னர் ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ஓய்வூதியம் உள்பட ஓய்வு கால பணப்பயன்களை உடனடியாக வழங்க வேண்டும். 7-வது ஊதியக்குழுவில் உயர்த்தப்பட்ட சம்பள உயர்வை போக்குவரத்துத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கும் அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு அனைத்து ஓய்வூதியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னையில் பல்லவன் இல்லம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பின் சென்னை மாவட்ட தலைவர் பி.ஏபல் தலைமை தாங்கினார். செயலாளர் என்.கிருஷ்ணமூர்த்தி ஆர்ப்பாட்டத்தை தொடங்கிவைத்தார்.

தமிழ்நாடு அரசு அனைத்து ஓய்வூதியர்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் எஸ்.ஜெகதீசன், பொருளாளர் கே.கர்சன், சென்னை குடிநீர் வாரியம் ஓய்வூதிய நலச்சங்கத்தின் தலைவர் என்.பரமச்சந்திரன், தமிழ்நாடு அரசு அனைத்துதுறை ஓய்வூதியர் சங்கத்தின் சென்னை மாவட்ட செயலாளர் என்.நாதன் உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

Next Story