மாவட்ட செய்திகள்

நாடாளுமன்ற இடைத்தேர்தல்: மண்டியா தொகுதியில் எனது பேரனை நிறுத்த மாட்டோம் - தேவேகவுடா + "||" + Parliamentary bypoll: We will not stop my grandson in Mandya constituency - Deve Gowda

நாடாளுமன்ற இடைத்தேர்தல்: மண்டியா தொகுதியில் எனது பேரனை நிறுத்த மாட்டோம் - தேவேகவுடா

நாடாளுமன்ற இடைத்தேர்தல்: மண்டியா தொகுதியில் எனது பேரனை நிறுத்த மாட்டோம் - தேவேகவுடா
நாடாளுமன்ற இடைத்தேர்தலில் மண்டியா தொகுதியில் எனது பேரனை நிறுத்த மாட்டோம் என தேவேகவுடா தெரிவித்துள்ளார்
பெங்களூரு,

சிவமொக்கா, மண்டியா, பல்லாரி ஆகிய 3 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் ராமநகர், ஜமகண்டி ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளுக்கு அடுத்த மாதம்(நவம்பர்) 3-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


இதுகுறித்து முன்னாள் பிரதமரும், ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவருமான தேவேகவுடா விஜயாப்புராவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

மண்டியா நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் எனது பேரனை நிறுத்த மாட்டோம். உள்ளூர் நிர்வாகிகளுக்கு வாய்ப்பு வழங்கப்படும். காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அமைத்தே இந்த இடைத்தேர்தலை சந்திக்கிறது.

காங்கிரசுடன் ஆலோசித்து பல்லாரி தொகுதிக்கு வேட்பாளரை இறுதி செய்வோம். சிவமொக்காவில் மது பங்காரப்பாவுக்கு வாய்ப்பு வழங்கப்படும். அவர் ஏற்க மறுத்தால், வேறு வேட்பாளரை தேர்வு செய்து நிறுத்துவோம்.

இவ்வாறு தேவேகவுடா கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. நாடாளுமன்ற இடைத்தேர்தல்: நடிகை ரம்யாவுக்கு பா.ஜனதா அழைப்பு
இன்று (சனிக்கிழமை) மண்டியா நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடக்கிறது. 2 தேர்தலில் வாக்களிக்காத நடிகை ரம்யா இன்றாவது மண்டியாவுக்கு வந்து ஓட்டுப்போடுமாறு பா.ஜனதா அழைப்பு விடுத்துள்ளது.