வத்திராயிருப்பு அருகே டிராக்டர் டிரைவர் வெட்டிக்கொலை
வத்திராயிருப்பு அருகே டிராக்டர் டிரைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள வத்திராயிருப்பு நாடார் பஜாரை சேர்ந்தவர் சரவணகுமார் (வயது44). திருமணம் ஆகாத இவர், வாடகைக்கு டிராக்டர் ஓட்டி வந்தார்.
இந்த நிலையில் வத்திராயிருப்பு கவுண்டம்பட்டி சாலையில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் பலத்த வெட்டுக்காயங்களுடன் சரவண குமார் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அந்த பகுதியில் சென்ற ஒருவர் இதனைப்பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
வத்திராயிருப்பு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜனும் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்.
கொலைக்கான காரணம் என்ன? கொலையாளிகள் யார்? என்பது தெரியவில்லை. கொலையில் துப்புத்துலக்க மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடி நின்று விட்டது. போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. முதற்கட்டமாக சரவணகுமாரின் நண்பர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story